Home நாடு காவல் துறை குற்றப் புலனாய்வுப் பிரிவு முன்னாள் இயக்குநர் ஜாமான் கான் காலமானார்

காவல் துறை குற்றப் புலனாய்வுப் பிரிவு முன்னாள் இயக்குநர் ஜாமான் கான் காலமானார்

546
0
SHARE
Ad

கோலாலம்பூர் : காவல் துறையின் குற்றப் புலனாய்வுப் பிரிவின் முன்னாள் இயக்குநர் ஜாமான் கான் இன்று காலமானார். அவருக்கு வயது 80.

மலேசியப் போலீஸ் துறை வரலாற்றில் மறக்க முடியாத பெயர் டான்ஶ்ரீ ஜாமான் கான். பல குற்றச் செயல்களை கண்டுபிடித்தவர். துணிச்சலுடன் பல தருணங்களில் கொள்ளையர்களையும், சமூக விரோதிகளையும் எதிர்த்துப் போராடியவர்.

அவர் இன்று சனிக்கிழமை (செப்டம்பர் 11) காலை 10.15 மணியளவில் காலமானார். புக்கிட் அமான் தலைமையகத்தில் குற்றப் புலனாய்வுத்துறைக்கு இயக்குநராக அவர் ஆகக் கடைசியாகப் பதவி வகித்தார்.

#TamilSchoolmychoice

காலமான அன்னாரின் நல்லுடல் புக்கிட் அமான் பள்ளிவாசலுக்குக் கொண்டுவரப்பட்டு, தொழுகைகளுக்குப் பின்னர் புக்கிட் கியாரா இஸ்லாமிய மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.