சென்னை : தமிழ்நாட்டின் காவல் துறையின் புதிய தலைவரான (ஐஜிபி) சைலேந்திர பாபு தனது அதிரடி நடவடிக்கையின் மூலம், ஒரே நாளில் 560 ரவுடிகளைத் தமிழ் நாடு முழுவதும் கைது செய்திருக்கிறார்.
அவரின் இந்த துணிச்சலான நடவடிக்கை, பல்வேறு தரப்புகளின் ஆதரவையும் பெற்று வருகிறது. ஆனால், இந்தக் கைது நடவடிக்கையால் சர்ச்சைகளும் எழுந்துள்ளன.
தன்னை ஒரு ஹீரோவாகக் காட்டிக் கொள்ள சைலேந்திர பாபு இவ்வாறு செய்திருக்கிறார் என்றும் சில தரப்புகள் குற்றம் சாட்டியுள்ளன.
எனினும், கைது செய்யப்பட்ட ரவடிகளுடன் 256 அரிவாள்கள், 3 கைத்துப்பாக்கிகள், போதைப் பொருட்களும் கைப்பற்றப்பட்டிருக்கின்றன.
சென்னையில் மட்டும் சுமார் 700 இடங்களில் சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு அதன் மூலமே இத்தனை பெரிய எண்ணிக்கையிலான ரவுடிகள் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.
Join us on our Telegram channel for more news and latest updates: https://t.me/selliyal
மேலும் கூடுதலான அண்மையச் செய்திகளைத் தெரிந்து கொள்ள எங்களின் Telegram (டெலிகிராம்) குறுஞ்செயலி இணைப்பில் இணைந்திருங்கள்: https://t.me/selliyal