Home நாடு 12-வது மலேசியத் திட்டம் : போதைப் பித்தர்கள் குற்றவாளிகள் பட்டியலில் இருந்து அகற்றம்

12-வது மலேசியத் திட்டம் : போதைப் பித்தர்கள் குற்றவாளிகள் பட்டியலில் இருந்து அகற்றம்

730
0
SHARE
Ad

கோலாலம்பூர் : 12-வது மலேசியத் திட்டத்தை நேற்று திங்கட்கிழமை (செப்டம்பர் 27-ஆம் தேதி) பிரதமர் இஸ்மாயில் சாப்ரி நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தார்.

அவர் சமர்ப்பித்த அந்த திட்டத்தின் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:

போதைப் பித்தர்கள் குற்றவாளிகள் பட்டியலில் இருந்து அகற்றம்

போதைப் பித்தர்கள் இனி குற்றவாளிகள் பட்டியலில் இருந்து அகற்றப்படுவர். இதன் மூலம் அவர்கள் குற்றப் பின்னணி ஏதும் இல்லாமல், இரண்டாவது வாழ்க்கையைத் தொடங்க அவர்களுக்கு இன்னொரு வாய்ப்பு கிடைக்கும்.

#TamilSchoolmychoice

போதைப் பொருள் தொடர்பான குற்றச்சாட்டுகளில் ஈடுபடாமல், போதைப் பொருள் உட்கொண்டதால் மட்டும் குற்றவாளிப் பட்டியலில் சேர்க்கப்பட்டவர்கள் இனி அந்தப் பட்டியலில் இருந்து நீக்கப்படுவார்கள்.

இதன் தொடர்பிலான சட்டங்களும் திருத்தங்கள் செய்யப்படும்.

400 பில்லியன் ரிங்கிட் மேம்பாட்டுத் திட்டங்கள்

ஏற்கனவே, செயல்படுத்தப்பட்டு வரும் மேம்பாட்டு நடவடிக்கைகளுக்காகவும், புதிய திட்டங்களுக்காகவும் 400 பில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாகவும் இஸ்மாயில் சாப்ரி அறிவித்தார்.

2016-2020 காலகட்டத்திற்கான 11-வது மலேசியத் திட்டத்தில் 248.5 பில்லியன் ரிங்கிட் மட்டுமே ஒதுக்கப்பட்டது.

கொவிட் தொற்று காரணமாக நாடு கடுமையானப் பாதிப்புகளை எதிர்நோக்கிய நிலையில் நாட்டின் பொருளாதாரம் 5.6 விழுக்காடு குறைந்தது. 11-வது மலேசியத் திட்ட காலத்தில் முதல் 4 ஆண்டுகளில் சராசரி 4.9 விழுக்காட்டு வளர்ச்சியை நாடு கண்டது.

சர்ச்சைக்குரிய சட்டங்கள் திருத்தப்படும்

சர்ச்சைக்குரிய சில சட்டத் திருத்தங்களை மேற்கொள்ளவும் 12-வது மலேசியத் திட்டத்தின் கீழ் இஸ்மாயில் சாப்ரி அறிவித்தார்.

போக்கா எனப்படும் குற்றச் செயல் தடுப்பு சட்டம் (Prevention of Crime Act (Poca) 1959) சோஸ்மா (Security Offences (Special Measures) Act (Sosma) 2012) பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் (Prevention of Terrorism Act (Pota) 2015) ஆகியவற்றோடு மலேசியக் குற்றவியல் சட்டங்களிலும் (Penal Code 1957) சில திருத்தங்கள் செய்யப்படும்.

தேசநிந்தனைச் சட்டம் (The Sedition Act 1948), அச்சக, பதிப்பாளர்கள் சட்டம் (Printing Presses and Publications Act 1984) ஆகியவையும் மறு ஆய்வு செய்யப்படும்.


Join us on our Telegram channel for more news and latest updates: https://t.me/selliyal

மேலும் கூடுதலான அண்மையச் செய்திகளைத் தெரிந்து கொள்ள எங்களின் Telegram (டெலிகிராம்) குறுஞ்செயலி இணைப்பில் இணைந்திருங்கள்: https://t.me/selliyal