Home நாடு 12-வது மலேசியத் திட்டம் : முக்கிய அம்சங்கள் : திட்டங்களுக்காக 400 பில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு

12-வது மலேசியத் திட்டம் : முக்கிய அம்சங்கள் : திட்டங்களுக்காக 400 பில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு

564
0
SHARE
Ad

கோலாலம்பூர் : 12-வது மலேசியத் திட்டத்தை இன்று திங்கட்கிழமை (செப்டம்பர் 27-ஆம் தேதி) பிரதமர் இஸ்மாயில் சாப்ரி நாடாளுமன்றத்தில் காலை 11.30 மணியளவில் சமர்ப்பித்தார்.

அவர் சமர்ப்பித்த அந்த திட்டத்தின் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:

  • ஏற்கனவே, செயல்படுத்தப்பட்டு வரும் மேம்பாட்டு நடவடிக்கைகளுக்காகவும், புதிய திட்டங்களுக்காகவும் 400 பில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாக இஸ்மாயில் அறிவித்தார்.
  • 2016-2020 காலகட்டத்திற்கான 11-வது மலேசியத் திட்டத்தில் 248.5 பில்லியன் ரிங்கிட் மட்டுமே ஒதுக்கப்பட்டது.
  • கொவிட் தொற்று காரணமாக நாடு கடுமையானப் பாதிப்புகளை எதிர்நோக்கிய நிலையில் நாட்டின் பொருளாதாரம் 5.6 விழுக்காடு குறைந்தது. 11-வது மலேசியத் திட்ட காலத்தில் முதல் 4 ஆண்டுகளில் சராசரி 4.9 விழுக்காட்டு வளர்ச்சியை நாடு கண்டது.
  • 12-வது மலேசியத் திட்டத்தின் சித்தாந்தம் “வளமையான, அனைவரையும் அரவணைக்கும், தொடர்வளர்ச்சி காணும் மலேசியா” என்றும் இஸ்மாயில் சாப்ரி அறிவித்தார்.

(மேலும் விவரங்கள் தொடரும்)


Join us on our Telegram channel for more news and latest updates: https://t.me/selliyal

#TamilSchoolmychoice

மேலும் கூடுதலான அண்மையச் செய்திகளைத் தெரிந்து கொள்ள எங்களின் Telegram (டெலிகிராம்) குறுஞ்செயலி இணைப்பில் இணைந்திருங்கள்: https://t.me/selliyal