Home நாடு அம்னோ வெற்றி பெற்ற எல்லாத் தொகுதிகளிலும் மீண்டும் போட்டியிடும்

அம்னோ வெற்றி பெற்ற எல்லாத் தொகுதிகளிலும் மீண்டும் போட்டியிடும்

976
0
SHARE
Ad

கோலாலம்பூர் : கடந்த 14-வது பொதுத் தேர்தலில் வெற்றி பெற்ற அனைத்து சட்டமன்ற, நாடாளுமன்றத் தொகுதிகளிலும் அம்னோ மீண்டும் போட்டியிடும் என சாஹிட் ஹாமிடி அறிவித்துள்ளார்.

பெரிக்காத்தான் நேஷனல் என்னும்  தேசியக் கூட்டணியில் உள்ள கட்சிகளுடன் மட்டுமே பெர்சாத்து தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைகளை நடத்தும் என மொகிதின் யாசின் ஏற்கனவே தெரிவித்திருந்தார். அம்னோவுடன் கூட்டணி பேச்சுவார்த்தைகளோ, தொகுதிப் பங்கீடுகளோ இல்லை எனவும் மொகிதின் யாசின் அறிவித்திருந்தார்.

அதற்குப் பதிலளிக்கும் வகையில் பேசிய அம்னோவின் தேசியத் தலைவர் சாஹிட் ஹாமிடி, அம்னோ உச்சமன்றத்தின் முடிவின்படி 14-வது பொதுத் தேர்தலில் வெற்றி பெற்ற அனைத்து சட்டமன்ற, நாடாளுமன்றத் தொகுதிகளிலும் எதிர்வரும் 15-வது பொதுத் தேர்தலில் போட்டியிடும் முடிவில் மாற்றமில்லை என்று கூறியிருக்கிறார்.

#TamilSchoolmychoice

2018-இல் நடைபெற்ற 14-வது பொதுத் தேர்தலில் அம்னோ 54 நாடாளுமன்றத் தொகுதிகளிலும், 241 சட்டமன்றத் தொகுதிகளிலும் வெற்றி பெற்றது.

இதன்மூலம், இன்றைய நிலையில் அம்னோவுக்கும் பெர்சாத்துவுக்கும் இடையிலோ அல்லது தேசியக் கூட்டணியிடனோ அரசியல் ஒத்துழைப்பு எதுவும் இல்லை என்பது தெளிவாகியிருக்கிறது.