Home நாடு மித்ரா மீதான விசாரணைகளை மஇகா வரவேற்கிறது – விக்னேஸ்வரன் அறிவிப்பு

மித்ரா மீதான விசாரணைகளை மஇகா வரவேற்கிறது – விக்னேஸ்வரன் அறிவிப்பு

523
0
SHARE
Ad

கோலாலம்பூர் : இன்று சனிக்கிழமை பிற்பகல் 3.30 மணியளவில் மஇகா தலைமையகத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய டான்ஶ்ரீ ச.விக்னேஸ்வரன், மித்ரா மீதான மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் விசாரணைகளை வரவேற்பதாக அறிவித்தார்.

“உப்பு தின்றவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் தண்ணீர் குடித்துத்தான் ஆக வேண்டும். இதற்கான விசாரணைகள் முன்பே தொடங்கப்பட்டிருக்க வேண்டும். எல்லா காலகட்டங்களிலும் வழங்கப்பட்ட மானியங்கள் குறித்து விசாரணைகள் தொடங்கப்பட்டாலும் அது நியாயமானதே. இதன் மூலம் எதிர்காலத்தில் மித்ராவின் செயல்பாடுகள் ஒழுங்கு முறையுடன் முறைப்படி நடக்கும் என எதிர்பார்க்கலாம். உண்மைகள் வெளிவரட்டும்” என விக்னேஸ்வரன் குறிப்பிட்டார்.

நேற்று வெள்ளிக்கிழமை (அக்டோபர் 15) ஜென் ஸெட் இளைஞர் குழுவினர் (Pemuda Gen Z) புத்ரா ஜெயாவில் உள்ள மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தில், மித்ராவுக்கு எதிராக ஊழல் புகார்களை விசாரிக்க வேண்டுமென்ற கோரிக்கை மனு ஒன்றை சமர்ப்பித்தனர்.

#TamilSchoolmychoice

அண்மையக் காலமாக மித்ராவிலும், அதன் முந்தைய அமைப்பான செடிக்கிலும் முறைகேடுகள் நடைபெற்றிருப்பதாக பல தரப்புகளில் இருந்தும் புகார்கள் – குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.

அதைத் தொடர்ந்து விசாரணைகள் தொடங்கப்படும் என ஊழல் தடுப்பு ஆணையத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டிருக்கிறது.


Join us on our Telegram channel for more news and latest updates: https://t.me/selliyal

மேலும் கூடுதலான அண்மையச் செய்திகளைத் தெரிந்து கொள்ள எங்களின் Telegram (டெலிகிராம்) குறுஞ்செயலி இணைப்பில் இணைந்திருங்கள்: https://t.me/selliyal