Home கலை உலகம் ஷாருக்கான் மகன் ஆர்யான் கானுக்கு மீண்டும் ஜாமீன் மறுப்பு

ஷாருக்கான் மகன் ஆர்யான் கானுக்கு மீண்டும் ஜாமீன் மறுப்பு

592
0
SHARE
Ad

மும்பை : போதைப் பொருள் வழக்கில் கைதாகி சிறைவாசம் அனுபவித்து வரும் நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யான் கானுக்கு மீண்டும் இன்று பிணை (ஜாமீன்) மறுக்கப்பட்டது.

ஆர்யான் கானுக்கு ஜாமீன் வழங்கக் கோரும் விசாரணை இன்று செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 26) நடைபெற்றாலும், எந்தவித முடிவும் எடுக்கப்படாமல் நாளை புதன்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டது. நாளை இந்திய நேரப்படி பிற்பகல் 2.30 மணியளவில் ஆர்யான் பிணை மீதான விசாரணையை மும்பை உயர்நீதிமன்றம் விசாரித்து தீர்ப்பு வழங்கும்.

இதைத் தொடர்ந்து ஆர்யான் மேலும் ஒருநாள் இன்றிரவு சிறையிலேயே தங்க வேண்டியிருக்கும்.

#TamilSchoolmychoice

மும்பை கடல் பகுதியில் உல்லாசக் கப்பல் ஒன்றில் சோதனை நடத்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் பலரைக் கைது செய்தனர். அவர்களில் ஷாருக்கானின் மகன் ஆர்யான் கானும் ஒருவர்.

இதைத் தொடர்ந்து ஆர்யான் கானுக்கு பிணை வழங்கக் கோரி அவரின் குடும்பத்தினர் முயற்சிகள் எடுத்து வருகின்றனர்.