Home கலை உலகம் ரஜினிகாந்த் மருத்துவமனையில்! நலமுடன் இருப்பதாக மனைவி தகவல்

ரஜினிகாந்த் மருத்துவமனையில்! நலமுடன் இருப்பதாக மனைவி தகவல்

754
0
SHARE
Ad

சென்னை : நடிகர் ரஜினிகாந்த் நேற்று வியாழக்கிழமை (அக்டோபர் 28) சென்னையிலுள்ள காவேரி மருத்துவமனையில் தொடர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.

அவருக்கு உடல் நலக் குறைவா என்பது தெரிவிக்கப்படவில்லை. அவர் மருத்துவ சிகிச்சைக்காக ஒரு நாள் மருத்துவமனையில் தங்கியிருப்பார் என்றும் அவர் நலமுடன் இருக்கிறார் என்றும் அவரின் மனைவி லதா ரஜினிகாந்த் தெரிவித்ததாக ஊடகங்கள் குறிப்பிட்டன.

கடந்த அக்டோபர் 25-ஆம் தேதிதான் புதுடில்லியில் நடைபெறும் சிறப்பு நிகழ்ச்சி ஒன்றில் ரஜினிகாந்த்துக்கு தாதா சாகேப் பால்கே விருது துணையதிபர் வெங்கய்யா நாயுடுவால் வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து அவர் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, அதிபர் ராம்நாத் கோவிந்த் ஆகியோரையும் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

#TamilSchoolmychoice

2019-ஆம் ஆண்டு இந்த தாதா சாகேப் பால்கே விருதுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தேர்வு செய்யப்பட்டிருந்தார். ஆனால் கொரோனா காரணமாக விருது நிகழ்ச்சி நடைபெறாததால் ரஜினிகாந்த் விருதை பெற்றுக் கொள்ளவில்லை.

அதே அக்டோபர் 25-ஆம் தேதி நிகழ்ச்சியில் 2019-ஆம் ஆண்டிற்கான தேசியத் திரைப்பட விருதுகளும் வழங்கப்பட்டன. அசுரன் படத்தில் மிகச் சிறப்பாக நடித்ததற்காக ரஜினியின் மருமகனான நடிகர் தனுஷூக்கு சிறந்த நடிகர் விருதும் வழங்கப்பட்டது.

அந்த நிகழ்ச்சிக்குப் பின்னர் சென்னை திரும்பியதும் ரஜினி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.


Join us on our Telegram channel for more news and latest updates: https://t.me/selliyal

மேலும் கூடுதலான அண்மையச் செய்திகளைத் தெரிந்து கொள்ள எங்களின் Telegram (டெலிகிராம்) குறுஞ்செயலி இணைப்பில் இணைந்திருங்கள்: https://t.me/selliyal