Home நாடு மலாக்கா : தேசிய முன்னணி தனித்துக் களம் காண்கிறது – மஇகா வேட்பாளர் வி.பி.சண்முகம்

மலாக்கா : தேசிய முன்னணி தனித்துக் களம் காண்கிறது – மஇகா வேட்பாளர் வி.பி.சண்முகம்

887
0
SHARE
Ad

மலாக்கா : தேசிய முன்னணி எதிர்வரும் மலாக்கா சட்டமன்றத் தேர்தலில் தனித்தே களம் காண்கிறது. இதன் மூலம் மும்முனைப் போட்டிகள் 28 தொகுதிகளிலும்  நடைபெறும் என கணிக்கப்படுகிறது.

இறுதி நிலவரம் நவம்பர் 8-ஆம் தேதி வேட்புமனுத் தாக்கல் நாளன்று தெரியவரும்.

இதற்கிடையில் தேசிய முன்னணி, மஇகாவுக்கு வழக்கம்போல் ஒரு தொகுதியை ஒதுக்கியுள்ளது. ஜசெக வேட்பாளர் ஜி.சாமிநாதன் போட்டியிடும் அதே காடெக் தொகுதியை மீண்டும் மஇகாவுக்கு தேசிய முன்னணி ஒதுக்கியுள்ளது.

#TamilSchoolmychoice

மஇகா வேட்பாளராக வி.பி.சண்முகம் அறிவிக்கப்பட்டிருக்கிறார்.

அண்மைய சில ஆண்டுகளாக காடெக் தொகுதியின் மஇகா ஒருங்கிணைப்பாளராகவும் சண்முகம் பணியாற்றி வந்தார்.