Home உலகம் சீனா : உலகின் முதல் பணக்கார நாடாக, அமெரிக்காவை முந்தியது

சீனா : உலகின் முதல் பணக்கார நாடாக, அமெரிக்காவை முந்தியது

571
0
SHARE
Ad

பெய்ஜிங் : இன்றைய நிலையில் உலகின் பணக்கார நாடுகள் பட்டியலில் சீனா முதலிடத்தைப் பிடித்துள்ளது. 120 டிரில்லியன் டாலர்கள் கொண்ட பொருளாதாரத்தைக் கொண்டுள்ள நாடாக அமெரிக்காவை முந்தியிருக்கிறது சீனா.

சுவிட்சர்லாந்தில் உள்ள மெக்கின்சி குளோபல் இன்ஸ்டிட்யூட் நடத்திய ஆய்வில்தான் உலகின் பணக்கார நாடாக அமெரிக்காவை பின்னுக்கு தள்ளி சீனா முதலிடத்தை பிடித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆய்வின்படி 2000-ஆம் ஆண்டில் உலகின் மொத்த பொருளாதார மதிப்பு 514 டிரில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. இதில், மூன்றில் ஒரு பங்கு சீனாவின் பங்களிப்பாகும்.

#TamilSchoolmychoice

அமெரிக்காவின் பொருளாதாரம் சுமார் 90 டிரில்லியன் டாலராக மதிப்பிடப்பட்டிருக்கிறது. அமெரிக்கா தற்போது உலக அளவில் 2-வது இடத்தில் உள்ளது.

பணக்கார நாடுகள் பட்டியலில், ஜெர்மனி 3வது இடத்திலும், பிரான்ஸ், இங்கிலாந்து, கனடா, ஆஸ்திரேலியா, ஜப்பான், மெக்சிகோ, ஸ்வீடன் நாடுகள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.

உலகளவில் 68 விழுக்காட்டு சொத்துக்கள் நிலம், கட்டடங்கள் சார்ந்த ரியல் எஸ்டேட் எனப்படும் நிலம் சார்ந்த சொத்துடமைத் துறைகளைச் சார்ந்து இருக்கிறது.