Home நாடு தூக்குத் தண்டனை கைதி நாகேந்திரனுக்கு ஆதரவாக மாமன்னர் கடிதம்

தூக்குத் தண்டனை கைதி நாகேந்திரனுக்கு ஆதரவாக மாமன்னர் கடிதம்

698
0
SHARE
Ad

கோலாலம்பூர் : சிங்கப்பூரில் போதைப் பொருள் கடத்தலுக்காக தூக்குத் தண்டனை வழங்கப்பட்டிருக்கும் மலேசியர் நாகேந்திரனுக்கு ஆதரவாக அவரின் தண்டனையைக் குறைக்க வேண்டுமெனக் கோரிக்கை விடுத்து மாமன்னர், சிங்கப்பூர் அதிபருக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

இந்தத் தகவலை துணை வெளியுறவு அமைச்சர் கமாருடின் ஜபார் இன்று நாடாளுமன்றத்தில் வெளியிட்டார்.

நாகேந்திரனை விடுதலை செய்வதற்கும், அவரின் தண்டனையைக் குறைப்பதற்கும் எங்களால் இயன்ற அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்திருக்கிறோம் என்றும் கமாருடின் ஜபார் தெரிவித்தார்.