Home நாடு நஜிப் குற்றவாளியே! 12 ஆண்டு சிறைத் தண்டனை – 210 மில்லியன் ரிங்கிட் அபராதம் –...

நஜிப் குற்றவாளியே! 12 ஆண்டு சிறைத் தண்டனை – 210 மில்லியன் ரிங்கிட் அபராதம் – மேல்முறையீட்டு நீதிமன்றம் உறுதிப்படுத்தியது

1047
0
SHARE
Ad

புத்ரா ஜெயா : எஸ்.ஆர். சி. இன்டர்நேஷனல் தொடர்பான வழக்கில் கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் நஜிப் துன் ரசாக்குக்கு விதித்த 12 ஆண்டுகள் சிறைத்தண்டனை, 210 மில்லியன் ரிங்கிட் அபராதத்தை இன்று புதன்கிழமை (டிசம்பர் 8) மேல்முறையீட்டு நீதிமன்றம் மறுஉறுதிப்படுத்தியது.

3 நீதிபதிகள் கொண்ட அமர்வு ஏகமனதாக இந்த முடிவை எடுத்தது.

இதைத் தொடர்ந்து கோலாலம்பூர் உயர் நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிரான நஜிப்பின் மேல்முறையீடு, மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் ஒரு முடிவுக்கு வருகிறது.

#TamilSchoolmychoice

இனி தண்டனையிலிருந்தும் சிறை செல்வதிலிருந்தும் தப்புவதற்கு அவருக்கு இரண்டு இறுதிக்கட்ட வாய்ப்புகள் இருக்கின்றன.

கூட்டரசு நீதிமன்றத்திற்கு மேல்முறையீடு செய்வது – அந்த மேல்முறையீட்டின் தீர்ப்பு வரும்வரை தண்டனையை அமுல்படுத்துவதிலிருந்து ஒத்தி வைப்பது முதலாவது வாய்ப்பாகும்.

இரண்டாவது வாய்ப்பு இறுதிக் கட்டமாக, மாமன்னரின் அரச மன்னிப்பைப் பெறுவது!

மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பைத் தொடர்ந்து அவர் இன்றே சிறைக்கு அனுப்பப்படுவாரா அல்லது கூட்டரசு நீதிமன்றத்திற்கு மேல்முறையீடு செய்வதால் அதுவரை சிறை செல்லாமல் அவர் தொடர்ந்து பிணையில் இருக்க வாய்ப்பு வழங்கப்படுமா என்பது இன்னும் அறிவிக்கப்படவில்லை.