Home நாடு நஜிப்: தீர்ப்பு வாசிக்கப்படுகிறது…

நஜிப்: தீர்ப்பு வாசிக்கப்படுகிறது…

1098
0
SHARE
Ad

புத்ரா ஜெயா : (காலை 10.30 மணி நிலவரம்) நஜிப்புக்கு எதிரான எஸ்ஆர்சி இண்டர்நேஷனல் நிறுவனம் தொடர்பிலான ஊழல் வழக்கு மேல்முறையீட்டில் இன்று புதன்கிழமை (டிசம்பர் 8) மேல்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பை வழங்கவிருக்கிறது.

காலை 10.00 மணிக்குத் தொடங்கிய மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் அமர்வில் தற்போது தீர்ப்பு வாசிக்கப்பட்டு வருகிறது.

இந்தத் தீர்ப்பு குறித்த மேலும் சில முக்கியத் தகவல்கள் பின்வருமாறு :

  • தீர்ப்பைப் பெறவிருக்கும் தன் தந்தை மன வலிமையைப் பெற அனைவரும் பிரார்த்திப்போம் என நஜிப்பின் மகள் நூர்யானா நஜ்வா நேற்று செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 7) சமூக ஊடகங்களில் பதிவிட்டார்.
  • தலைநகர் பெவிலியன் அடுக்குமாடி குடியிருப்பிலுள்ள தனது இல்லத்திலிருந்து நஜிப் “சூம்” இணையத் தொடர்பு மூலமாக இந்த வழக்கின் தீர்ப்பை செவிமெடுத்து வருகிறார்.
  • புத்ரா ஜெயாவிலுள்ள மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் வளாகத்தில் திரளான பத்திரிகையாளர்கள் குழுமியுள்ளனர்.
#TamilSchoolmychoice