Home உலகம் சீனா, மியான்மார், வட கொரியா, வங்காளதேசம் மீது அமெரிக்கா மனித உரிமைகள் தொடர்பில் தடைகளை விதித்தது

சீனா, மியான்மார், வட கொரியா, வங்காளதேசம் மீது அமெரிக்கா மனித உரிமைகள் தொடர்பில் தடைகளை விதித்தது

608
0
SHARE
Ad

வாஷிங்டன் : பல நிறுவனங்கள், தனிநபர்கள், நாடுகள் என விரிவான மனித உரிமைகள் தொடர்பான தடைகளை அமெரிக்கா நேற்று வெள்ளிக்கிழமை (டிசம்பர் 10) அறிவித்தது.

சீனா, மியான்மார், வட கொரியா, வங்காளதேசம் ஆகிய நாடுகள் மீது அமெரிக்கா தடைகளை அமுல்படுத்தியுள்ளது.

சீனாவின் தொழில்நுட்ப நிறுவனமான சென்ஸ் டைம் குரூப் நிறுவனத்தையும் முதலீட்டுக்கான கறுப்புப் பட்டியலில் அமெரிக்கா சேர்த்துள்ளது.

#TamilSchoolmychoice

மியான்மார் மீதான தடைகளை அமுல்படுத்துவதில் அமெரிக்காவோடு கனடாவும், பிரிட்டனும் இணைந்து கொண்டுள்ளன.

நேற்று அனுசரிக்கப்பட்ட உலக மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு அமெரிக்கா இந்த புதிய தடைகளை அறிவித்தது.

ஜோ பைடன் அதிபராகப் பொறுப்பேற்றதும் வடகொரியாவுக்கு எதிராகத் தடைகளை விதிப்பது இதுவே முதன் முறையாகும்.

அமெரிக்காவின் முடிவுக்கு சீனா கடும் கண்டனம் தெரிவித்தது. தனது உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுவதற்கு இது ஒப்பானது என்றும் சீனா தெரிவித்தது.