Home கலை உலகம் “வலிமை” – பொங்கலுக்கு வெளியீடு இல்லை

“வலிமை” – பொங்கலுக்கு வெளியீடு இல்லை

1255
0
SHARE
Ad

சென்னை : கடந்த ஈராண்டுகளுக்கும் மேலாக தமிழ்ப் பட இரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கும் படம் அஜித்குமார் நடித்த “வலிமை”.

எதிர்வரும் பொங்கலுக்கு உலக அளவில் இந்தப் படம் திரையீடு காணும் என அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும் இன்று வியாழக்கிழமை இரவு வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி “வலிமை” பொங்கல் கொண்டாட்டத்தை முன்னிட்டு திரையரங்குகளில் திரையிடப்படாது.

எனினும் ‘வலிமை’ நேரடியாக ஓடிடி எனப்படும் கட்டண வலைத் திரையில் திரையிடப்படாது என படத் தயாரிப்பாளர் போனி கபூர் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

தற்போதுள்ள கொவிட்-19, ஓமிக்ரோன் தொற்று தொடர்பான நிலைமை சரியானதும், வலிமை கண்டிப்பாக திரையரங்குகளில் திரையிடப்படும் என போனி கபூர் உறுதியளித்தார்.