Home நாடு துன் மகாதீர் மீண்டும் ஐஜேஎன் மருத்துவமனையில் அனுமதி

துன் மகாதீர் மீண்டும் ஐஜேஎன் மருத்துவமனையில் அனுமதி

769
0
SHARE
Ad

கோலாலம்பூர் : துன் மகாதீர் முகமட் மீண்டும் ஐஜேஎன் எனப்படும் தேசிய இருதயக் கழக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நடப்பு கொவிட்-19 தொடர்பான நிபந்தனைக் கட்டுப்பாடுகள் காரணமாக அவரைப் பார்ப்பதற்கு பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை என்றும் மருத்துவமனை அறிக்கை தெரிவித்தது.

கடந்த ஆண்டு ஜூலையில் 96 வயதைக் கடந்திருக்கும் மகாதீர் இரண்டு முறை இருதயத்திற்குச் செல்லும் இரத்த நாளங்கள் தொடர்பான பைபாஸ் அறுவைச் சிகிச்சை மேற்கொண்டவராவார்.

#TamilSchoolmychoice

அடிக்கடி இருதயம் தொடர்பான சிகிச்சைகள், பரிசோதனைகளுக்காக ஐஜேஎன்னில் அனுமதிக்கப்பட்டிருக்கும் மகாதீர், கடந்த டிசம்பர் மாதம் கூட சிகிச்சைக்காக சில நாட்கள் அந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.