Home உலகம் அமெரிக்கப் போர்க்கப்பல்கள் தென் சீனக் கடல் பகுதியில் நுழைந்தன

அமெரிக்கப் போர்க்கப்பல்கள் தென் சீனக் கடல் பகுதியில் நுழைந்தன

837
0
SHARE
Ad
அமெரிக்கப் போர்க்கப்பல் – கோப்புப் படம்

வாஷிங்டன் : சர்ச்சைக்குரிய தென் சீனக் கடல் பகுதியில் இரண்டு அமெரிக்க விமானந்தாங்கிப் போர்க்கப்பல்கள் நுழைந்திருப்பதாக அமெரிக்கத் தற்காப்பு இலாகா தெரிவித்துள்ளது.

தென் சீனக் கடல் பகுதியில் பல வட்டாரங்களை சீன, அமெரிக்க சார்பு நாடுகள் சொந்தம் கொண்டாடுகின்றன. இதன் காரணமாக சீனாவும் அமெரிக்காவும் கடுமையான சர்ச்சை மோதல்களில் ஈடுபட்டிருக்கின்றன.

இந்தக் கடல்பகுதியில் செயற்கையாக உருவாக்கப்பட்ட தீவுகளில் இரு நாடுகளும் தங்களின் இராணுவ முகாம்களை அமைத்துள்ளன.

#TamilSchoolmychoice

முரண்பாடான ஆதிக்கங்களை முறியடிக்கும் நோக்கிலேயே இந்தக் கடல் பகுதியில் அமெரிக்கப் போர்க்கப்பல்கள் நுழைந்தன எனவும் அமெரிக்கத் தற்காப்பு இலாகா தெரிவித்தது.