Home கலை உலகம் கதாநாயகனாக நடிக்கிறார் யுவன் சங்கர் ராஜா

கதாநாயகனாக நடிக்கிறார் யுவன் சங்கர் ராஜா

607
0
SHARE
Ad

yuvanசென்னை, ஏப்ரல் 23- தான் இசையமைக்கும் படங்களில் பாடல் காட்சிகளில் அவ்வப்போது தோன்றி வந்த யுவன் சங்கர் ராஜா, தற்போது கதாநாயகனாக நடிக்க உள்ளார்.
எஸ்கேப் ஆர்டிஸ்ட் மோஷன் பிக்சர்ஸின் எஸ் மதன் தயாரிப்பில் உருவாகும் இப்படத்திற்கு, இன்னும் பெயர் சூட்டப்படவில்லை.

இதற்கு வசதியாக இசையமைக்கும் படங்களுக்கு மூன்று மாதங்கள் தள்ளி கால்ஷீட் கொடுத்துள்ளாராம்.

மேலும் இந்தப் படம் நன்றாக ஓடினால் மட்டுமே தொடர்ந்து படங்களில் நடிப்பேன் என்றும், இல்லாவிட்டால் நடிக்க மாட்டேன் என்றும் முன்னெச்சரிக்கையாகக் கூறியுள்ளார்.

#TamilSchoolmychoice

ஏற்கெனவே சில இசை காணோலிகளில் நடித்திருந்தாலும், நாயகனாக நடிப்பதால் நடனம், உடற்பயிற்சி என மிக தீவிரமாக உள்ளாராம்.