பொங்கலுக்கு உலக அளவில் இந்தப் படம் திரையீடு காணும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், திரையரங்குகளில் 50 விழுக்காட்டினர் மட்டுமே அனுமதிக்கப்படுவர் என்ற நிலைமை இருந்ததால், படத்தின் வெளியீடு ஒத்தி வைக்கப்பட்டது.
படத் தயாரிப்பாளர் போனி கபூர் இன்று புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்பின்படி “வலிமை” எதிர்வரும் 24-ஆம் தேதி வெளியீடு காணும் என உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது.
அடுத்த சில நாட்களில் தமிழ் நாட்டின் திரையரங்குகளில் 100 விழுக்காட்டு இரசிகர்கள் அனுமதிக்கப்படுவர் என்ற அறிவிப்பை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
Comments