Home உலகம் உக்ரேனுக்கு எதிராக எல்லைகளில் ரஷியா இராணுவத்தை பலப்படுத்துகிறது

உக்ரேனுக்கு எதிராக எல்லைகளில் ரஷியா இராணுவத்தை பலப்படுத்துகிறது

659
0
SHARE
Ad

மாஸ்கோ : புதிதாகக் கிடைக்கப் பெற்றிருக்கும் துணைக்கோளப் புகைப்படங்களின் அடிப்படையில் உக்ரேனுடனான எல்லைப் பகுதியில் ரஷியா தனது இராணுவத் தளவாடங்களையும், துருப்புகளையும் குவித்து வருவதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

பெலாரஸ், கிரிமியா, மேற்கு ரஷியா ஆகிய பகுதிகளில் ரஷியாவின் இராணுவம் தனது ஆதிக்கத்தை அதிகரித்து வருகிறது.

இதற்கிடையில், ரஷியாவின் போர் அபாயத்திற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஐரோப்பா கண்டத்திற்கு கூடுதல் அமெரிக்கத் துருப்புகளை அனுப்ப அமெரிக்க அதிபர் ஜோ பைடன் முடிவெடுத்திருக்கிறார்.