Home நாடு அசாம் பாக்கி விவகாரம் : லலிதா குணரத்னம் காவல் துறையினரால் விசாரிக்கப்பட்டார்

அசாம் பாக்கி விவகாரம் : லலிதா குணரத்னம் காவல் துறையினரால் விசாரிக்கப்பட்டார்

570
0
SHARE
Ad

கோலாலம்பூர் : ஊடகவியலாளரும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைவர் அசாம் பாக்கிக்கு எதிராக, அவரின் பங்குடமை குறித்து விரிவாக எழுதியவருமான லலிதா குணரத்னம் இன்று வியாழக்கிழமை காவல் துறையினரால் விசாரிக்கப்பட்டார்.

அசாம் பாக்கி பங்குடமை குறித்து எழுதிய 2 கட்டுரைகள் தொடர்பில் அவர் தனது வாக்குமூலத்தை புக்கிட் அமான் காவல் துறை தலைமையகத்தில் வழங்கினார்.

1998-ஆம் ஆண்டின் தொடர்பு, பல் ஊடக சட்டத்தின் கீழ் அவர் விசாரிக்கப்படுவதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

#TamilSchoolmychoice

லலிதாவுக்கு எதிராக ஊழல் தடுப்பு ஆணைய அதிகாரிகள் கடந்த ஜனவரி 7-ஆம் தேதி காவல் துறையில் புகார் ஒன்றைச் செய்தனர். ஒருநாளுக்கு முன்பாக ஜனவரி 6-ஆம் தேதி வழக்கறிஞர் கடிதம் ஒன்றையும் அசாம் பாக்கி வழக்கறிஞர்களிடம் இருந்து லலிதா பெற்றார்.

தன்னிடம் 83 கேள்விகளை காவல் துறையினர் கேட்டதாகவும் லலிதா பின்னர் பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார்.