கொழும்பு, ஏப்.23- ராஜபக்ச நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
இலங்கைக்கும், தமிழ்நாட்டுக்கும் இடையே பதற்ற நிலை நிலவுவதாக கூறுகிறீர்கள். தமிழ்நாட்டில் உள்ள அரசியல் தலைவர்கள் இலங்கைக்கு வர வேண்டும் என்றும், இங்கு ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களை அவர்கள் நேரில் பார்த்து தெரிந்து கொள்ள வேண்டும் என்றும் நான் கேட்டுக் கொள்கிறேன்.
இதற்கு முன் தமிழ்நாட்டில் இருந்து இலங்கைக்கு வந்த அரசியல்வாதிகள், இங்குள்ள நிலைமை குறித்து திருப்தி தெரிவித்து உள்ளனர். அங்கு (தமிழ்நாட்டில்) இலங்கை அரசுக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ள போதிலும், இந்தியாவுடனான எங்கள் உறவு முற்றிலும் பாதிக்கப்படவில்லை. இந்தியாவுடன் தொடர்ந்து நல்லுறவு வைத்து இருக்கிறோம்.
அந்த நல்லுறவை மேம்படுத்த தொடர்ந்த பாடுபடுகிறோம். இவ்வாறு ராஜபக்சே கூறினார். இலங்கையின் வட பகுதியில் மாகாண கவுன்சில் தேர்தல் எப்போது நடைபெறும்? என்ற கேள்விக்கு அவர் பதில் அளிக்கையில்; அதற்கான சூழ்நிலை அங்கு நிலவுவதாக தான் கருதுவதாக தெரிவித்தார்.