Home நாடு மஇகா கூட்டரசுப் பிரதேசம், எஸ்பிஎம் தமிழ் மொழி தேர்வு வழிகாட்டி நூல்களை இலவசமாக வழங்கியது

மஇகா கூட்டரசுப் பிரதேசம், எஸ்பிஎம் தமிழ் மொழி தேர்வு வழிகாட்டி நூல்களை இலவசமாக வழங்கியது

920
0
SHARE
Ad
நூல்களை வழங்கும் டத்தோ ராஜா சைமன் – (இடமிருந்து) மஇகா கூட்டரசுப் பிரதேச மாநிலப் பொறுப்பாளர்கள் பாலகுமாரன், டத்தோ விஜயமோகன், கிருஷ்ணமூர்த்தி

கோலாலம்பூர் : வி ஷைன் கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரித்து பதிப்பித்திருக்கும் “எஸ்பிஎம் தமிழ் மொழி தேர்வு வழிகாட்டி” என்னும் நூலை எதிர்வரும் மார்ச் மாதம் எஸ்பிஎம் தமிழ்மொழி தேர்வு எழுதவிருக்கும் கோலாலம்பூர் கூட்டரசுப் பிரதேச மாநிலத்தில் உள்ள மாணவர்களுக்கு மஇகா கூட்டரசுப் பிரதேசம் இலவசமாக வழங்கியது.

மஇகா கூட்டரசுப் பிரதேச மாநிலத் தலைவரும், கோலாலம்பூர் மாநகர மன்றம் (DBKL) ஆலோசனை வாரிய உறுப்பினருமான டத்தோ ராஜா சைமன் அவர்களின் ஏற்பாட்டில் இந்த நூல்கள் வழங்கப்பட்டன.

கடந்த திங்கட்கிழமை பிப்ரவரி 21-ஆம் தேதி மாலையில், மஇகா தலைமையகத்தில் உள்ள, மஇகா கூட்டரசுப் பிரதேச அலுவலகத்தில் இந்த நூல்கள் நேரடியாக கூட்டரசுப் பிரதேச எஸ்பிஎம் தமிழ் மொழி ஆசிரியர்களிடம் வழங்கப்பட்டன.

#TamilSchoolmychoice

கூட்டரசுப் பிரதேசத்தில் உள்ள இந்திய மாணவர்கள் எஸ்பிஎம் தேர்வுகளில் தமிழ் மொழியை ஒரு பாடமாக எடுப்பதை ஊக்குவிக்கவும், அவ்வாறு எடுக்கும் மாணவர்கள் தமிழ் மொழியில் சிறந்த முறையில் தேர்ச்சி பெற உதவும் நோக்கிலும் இந்த நூல்களை இலவசமாக வழங்க ஏற்பாடு செய்ததாக டத்தோ ராஜா சைமன் தெரிவித்தார்.

நூல்கள் பெற்றுக் கொண்ட ஆசிரியர்கள், மஇகா கூட்டரசுப் பிரதேசப் பொறுப்பாளர்கள், எஸ்பிஎம் தேர்வு வழிகாட்டி நூலாசிரியை சா.விக்னேஸ்வரி…

கடந்த ஆண்டும் இதே போன்று எஸ்பிஎம் தமிழ் மொழி தேர்வு எழுதும் மாணவர்களுக்கு மஇகா கூட்டரசுப் பிரதேச ஏற்பாட்டில் இந்த நூல்கள் வழங்கப்பட்டன எனவும் தெரிவித்த ராஜா சைமன், தொடர்ந்து கூட்டரசுப் பிரதேச இந்திய மாணவர்கள் கல்வியில் மேம்பாடு காண மஇகா கூட்டரசுப் பிரதேச நிர்வாகம் தன்னால் இயன்ற அனைத்து உதவிகளையும் வழங்கும் எனவும் உறுதியளித்தார்.

ஆசிரியர்களின் மூலமாக அடுத்த மாதம் தமிழ் மொழி தேர்வு எழுதவிருக்கும் எஸ்பிஎம் மாணவர்களுக்கு இந்த நூல்கள் இலவசமாக வழங்கப்படும். நூல்களை இதுவரை பெற்றுக் கொள்ளாத ஆசிரியர்கள், மாணவர்கள் இந்த நூல்களைப் பெற்றுக் கொள்ள கீழ்க்காணும் கைப்பேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்:

திருமதி சா.விக்னேஸ்வரி 012-3922497