Home நாடு ஜோகூர் : பெரும்பாலானத் தொகுதிகளில் 4 அல்லது 5 முனைப் போட்டிகள்

ஜோகூர் : பெரும்பாலானத் தொகுதிகளில் 4 அல்லது 5 முனைப் போட்டிகள்

830
0
SHARE
Ad

ஜோகூர் பாரு: ஜோகூர் சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று சனிக்கிழமை நடந்து முடிந்திருக்கும் நிலையில், பெரும்பாலான தொகுதிகளில் 4 அல்லது 5 முனைப் போட்டிகள் நிலவுகின்றன.

எனவே, எந்தத் தொகுதியில் யார் வெற்றி பெறுவார்கள் என்பது கணிக்க முடியாத ஒன்றாக இருக்கும் என அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.

அதற்கு முக்கியமாக இரண்டு காரணங்கள். முதலாவது காரணம் தானியங்கி வாக்காளர் பதிவின் காரணமாக ஒவ்வொரு தொகுதியிலும் சராசரியாக சுமார் 10 ஆயிரம் வாக்குகள் வரை வாக்காளர் எண்ணிக்கை உயர்ந்திருக்கிறது.

#TamilSchoolmychoice

இரண்டாவது காரணம், 18+ வாக்காளர்களின் வருகை. இவர்களின் வாக்குகள் எந்தப் பக்கம் செல்லும் என்பதும் மூடா கட்சி இந்தப் பிரிவினரின் வாக்குகளைக் கவர முடியுமா என்பதும் ஜோகூர் தேர்தல் முடிவுகள் நமக்குத் தரப்போகும் முக்கிய அரசியல் விடையாகும்.

வாக்குகள் பிளவுபடுவதால் எந்தக் கூட்டணிக்கு இலாபம்?

பக்காத்தான் கூட்டணி, அம்னோ-தேசிய முன்னணி, பெஜூவாங் என 3 பெரும் அரசியல் அமைப்புகளும் மலாய் வாக்குகளைக் குறிவைத்துக் களமிறங்கியிருக்கின்றன.

மலாய் வாக்குகள் பிளவுபடுவதால், மலாய்க்காரர் அல்லாத வாக்காளர்களின் ஆதரவோடு பக்காத்தான் பெரும்பான்மை தொகுகதிகளை வெல்ல முடியும் என்ற கணிப்பு சில அரசியல் பார்வையாளர்களால் முன்வைக்கப்படுகிறது.

வேறு சிலரோ, பிளவுபடும் மலாய் வாக்குகள் அனைத்துமே எதிரணிக்கான வாக்குகள் என்றும் இதனால் தேசிய முன்னணி-அம்னோவுக்கு ஆதரவான வாக்குகள் அப்படியே நிலைநிறுத்தப்படும் என்றும் – அதனால் தேசிய முன்னணி மிகப் பெரிய வெற்றியைப் பெறும் என்ற கருத்தை வலியுறுத்துகின்றனர்.

ஜோகூர் தேர்தல் முடிவுகள், அடுத்த 15-வது பொதுத் தேர்தலுக்கான வியூகங்களை அரசியல் கட்சிகள் மீண்டும் பரிசீலித்து, மாற்றியமைக்கும் வண்ணம் இருக்கும் என்பது மட்டும் திண்ணம்.