Home நாடு ஜோகூர் : பெரிக்காத்தான் நேஷனல் 56 தொகுதிகளிலும் போட்டி

ஜோகூர் : பெரிக்காத்தான் நேஷனல் 56 தொகுதிகளிலும் போட்டி

751
0
SHARE
Ad

ஜோகூர் பாரு : நாளை சனிக்கிழமை (பிப்ரவரி 26) நடைபெறவிருக்கும் ஜோகூர் மாநில சட்டமன்றத் தேர்தலில் பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணி மொத்தமுள்ள 56 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றது.

41 புதிய முகங்களை பெரிக்காத்தான் நிறுத்துவதாக அந்தக் கூட்டணியின் தலைவர் டான்ஸ்ரீ மொகிதின் யாசின் தெரிவித்தார்.

இந்த வேட்பாளர்கள் அனைவரின் பின்னணிகளும் குறிப்பாக, காவல் துறை, ஊழல் தடுப்பு ஆணையம், மலேசிய திவால் இலாகா ஆகிய அமைப்புகளின் வழியாக சோதிக்கப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

பெரிக்காத்தான் வேட்பாளர்களில் 19 பேர் 40 வயதுக்கும் குறைவானவர்கள். இவர்களில் ஆகக் குறைந்த வயதுடையவர் 31 வயது கொண்டவராவார்.

பெரிக்காத்தான் வேட்பாளர்களில் ஏற்கனவே சட்டமன்ற உறுப்பினர்களாக இருக்கும் 15 பேருக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.

56 வேட்பாளர்களில் 33 பேர் பெர்சாத்து கட்சியையும் அதன் நட்புக் கட்சிகளையும் சேர்ந்தவர்கள். 15 வேட்பாளர்களை பாஸ் நிறுத்துகிறது. அவர்களில் ஒருவர் முஸ்லீம் அல்லாதவர் ஆவார்.

கெராக்கான் கட்சிக்கு 8 தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருக்கின்றன.