Home உலகம் உக்ரேன் தலைநகர் நோக்கி முன்னேறும் ரஷியப் படைகள்

உக்ரேன் தலைநகர் நோக்கி முன்னேறும் ரஷியப் படைகள்

583
0
SHARE
Ad
இராணுவ உடையில் விளாடிமிர் செலன்ஸ்கி (கோப்புப் படம்)

கீவ் : ரஷிய இராணுவத் துருப்புகள் உக்ரேனுக்குள் நுழைந்து அந்நாட்டின் தலைநகர் கீவ் நோக்கி முன்னேறத் தொடங்கியுள்ளன. கீவ் நகரின் மையப் பகுதிகளில் உக்ரேன் இராணுவத்தினருக்கும் ரஷியப் படைகளுக்கும் இடையில் கடுமையான மோதல்கள் நடைபெற்று வருகின்றன.

இதற்கிடையில் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய உக்ரேனிய அதிபர் விளாடிமிர் செலன்ஸ்கி, தம் நாட்டின் தலைவிதி இன்று முடிவு செய்யப்படலாம் என சோகத்துடன் கூறியிருக்கிறார்.

44 வயதான செலன்ஸ்கி, கீவ் நகரில் ரஷியத் துருப்புகளால் இன்று சனிக்கிழமை (பிப்ரவரி 26) முற்றுகையிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

#TamilSchoolmychoice

பொதுமக்கள் குழந்தைகளுடன் சுரங்க ரயில் பாதை நிலையங்களில் கூட்டம் கூட்டமாகத் தஞ்சமடைந்திருக்கின்றனர்.