Home இந்தியா ரஷியாவின் தாக்குதலுக்கு எதிரான ஐ.நா. தீர்மானம் – இந்தியா நடுநிலை

ரஷியாவின் தாக்குதலுக்கு எதிரான ஐ.நா. தீர்மானம் – இந்தியா நடுநிலை

791
0
SHARE
Ad
டி.எஸ்.திருமூர்த்தி – இந்தியாவுக்கான ஐநா தூதர்

நியூயார்க் : உக்ரேனுக்கு எதிரான ரஷியாவின் தாக்குதலுக்கு எதிரான அமெரிக்க ஆதரவு தீர்மானம் ஒன்றை நேற்று வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 25) ஐக்கிய நாடுகள் (ஐநா) பாதுகாப்பு மன்றம் முன்மொழிந்தது.

இந்தத் தீர்மானத்திற்கு வாக்களிப்பதில் இந்தியா நடுநிலை வகித்தது. சீனா, ஐக்கிய அரபு சிற்றரசு நாடுகளும் நடுநிலை வகித்தன.

இந்தியாவுக்கான ஐநா தூதர் டி.எஸ்.திருமூர்த்தி, உக்ரேனில் உள்ள இந்தியர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் எனத் தெரிவித்தார். இருநாடுகளுக்கும் இடையிலான மோதல்கள் பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்க்கப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

#TamilSchoolmychoice

பெரும்பாலான ஐநா பாதுகாப்பு மன்ற உறுப்பிய நாடுகள் இந்தத் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தாலும், ரஷியா தனது விட்டோ எனப்படும் இரத்து அதிகாரத்தைப் பயன்படுத்தி தீர்மானத்தை முறியடித்தது.