Home இந்தியா உத்தரப் பிரதேசத் தேர்தலில் பாஜக மீண்டும் வெற்றி!

உத்தரப் பிரதேசத் தேர்தலில் பாஜக மீண்டும் வெற்றி!

587
0
SHARE
Ad
உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்ய நாத்

புதுடில்லி : பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட உத்தரப் பிரதேச சட்டமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி மாபெரும் வெற்றி பெற்றிருக்கிறது. இதைத் தொடர்ந்து யோகி ஆதித்யநாத் மீண்டும் உ.பி.முதல்வராகப் பதவியேற்கிறார்.

மலேசிய நேரப்படி இரவு 8.30 மணிவரையிலான அறிவிப்புகளின்படி, மொத்தமுள்ள 403 தொகுதிகளில் 264 தொகுதிகளை பாஜக வெற்றி கொண்டிருக்கிறது அல்லது முன்னணி வகிக்கிறது என தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன. காங்கிரஸ் கட்சி இதுவரையில் 2 இடங்களை மட்டுமே கைப்பற்றி மோசமானத் தோல்விகளைச் சந்தித்திருக்கிறது.

இந்த முறை பிரியங்கா காந்தி தேர்தல் பிரச்சாரங்களில் முன்னிறுத்தப்பட்டாலும் காங்கிரஸ் கட்சி படுமோசமானத் தோல்விகளைச் சந்தித்திருக்கிறது.

#TamilSchoolmychoice

இதற்கிடையில் அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமஜ்வாடி கட்சி 134 தொகுதிகளில் முன்னணி வகிக்கிறது. இதைத் தொடர்ந்து மாநிலத்தின் பிரதான எதிர்க்கட்சியாக சமஜ்வாடி கட்சி உருவெடுத்திருக்கிறது.

மாயாவதி தலைமையிலான பிஎஸ்பி கட்சியும் ஒரே ஒரு தொகுதியில் மட்டும் முன்னணி வகித்து மோசமான தோல்விகளைத் தழுவியிருக்கிறது.

உத்தரப் பிரதேசத் தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து இந்தியாவின் மிகப் பெரிய அந்த மாநிலத்தில் இரண்டாவது முறையாகத் தொடர்ச்சியாக ஆட்சி அமைக்கும் சாதனையை பாஜக புரிந்திருக்கிறது.