Home இந்தியா டில்லி நிகழ்ச்சியில் அர்விந்த் கெஜ்ரிவாலுடன் ஸ்டாலின்

டில்லி நிகழ்ச்சியில் அர்விந்த் கெஜ்ரிவாலுடன் ஸ்டாலின்

758
0
SHARE
Ad

புதுடில்லி : இங்கு கடந்த சில நாட்களாக பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வரும் தமிழ் நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பள்ளி நிகழ்ச்சி ஒன்றிலும் கலந்து சிறப்பித்தார். டில்லி முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவாலும் அந்த நிகழ்ச்சியில் ஸ்டாலினுடன் இணைந்து கொண்டார்.

டில்லி அரசாங்கத்தின் மாதிரிப் பள்ளி ஒன்றுக்கு வருகை தந்த ஸ்டாலின் மொஹால்லா மருத்துவ கிளினிக்கையும் அர்விந்த் கெஜ்ரிவாலுடன் பார்வையிட்டார்.

டில்லி மாதிரிப் பள்ளி பாணியில் உலகத் தரத்திலான அரசாங்கப் பள்ளி ஒன்றை சென்னையில் விரைவில் நிறுவவிருப்பதாகவும் தெரிவித்த ஸ்டாலின் அந்தப் பள்ளிக்கு வருகை தரும் அழைப்பையும் கெஜ்ரிவாலுக்கு விடுத்தார்.

#TamilSchoolmychoice