Home உலகம் இந்தோனேசிய வீட்டுப் பணிபெண்களை வேலைக்கு எடுக்கும் செலவினங்கள்- பாதுகாப்பு- சரவணன் அறிக்கை

இந்தோனேசிய வீட்டுப் பணிபெண்களை வேலைக்கு எடுக்கும் செலவினங்கள்- பாதுகாப்பு- சரவணன் அறிக்கை

701
0
SHARE
Ad
டத்தோஶ்ரீ எம்.சரவணன்

“இந்தோனேசிய வீட்டுப் பணிபெண்களை வேலைக்கு எடுக்கும் செலவினங்கள் மற்றும் அவர்களுக்கான பாதுகாப்பு” – மனித வள அமைச்சர் டத்தோஸ்ரீ எம்.சரவணன் அறிக்கை

ஏப்ரல் 1. 2022இல் இந்தோனேசிய வீட்டுப்பணிப்பெண் தொடர்பான புரிந்துணர்வு உடன்படிக்கை கையெழுத்திடப்பட்டது. அந்த அடிப்படையில் விரைவில் அவர்களை வரவழைப்பதற்கான ஏற்பாடுகள் தொடங்கும்.

இந்தோனேசிய வீட்டுப் பணிபெண்களை வேலைக்கு எடுக்க விரும்பினால், இந்தோனேசியா மற்றும் மலேசியாவை உள்ளடக்கிய 15 வகையான செலவினங்கள் இதில் அடங்கும்.

குறிப்பிட்ட சில :-

  மலேசியாவில் இந்தோனேசியாவில்
1. குடிநுழைவு பாதுகாப்புத் தொகை கடப்பிதழ்
2. காப்புறுதி வேலை விசா
3. மருத்துவப் பரிசோதனை மருத்துவ சான்றிதழ்
4. லெவி தகுதிச் சான்றிதழ்
5. வேலை அனுமதிக்கான கட்டணம் Psikologi சான்றிதழ்
#TamilSchoolmychoice

சர்வதேச தொழிலாளர் அமைப்பு வெளியிட்ட நியாயமான முறையில் தொழிலாளர்களை எடுக்கும் பரிந்துரைப்படி, இந்த செலவுகள் அனைத்தையும் முதலாளிமார்கள் ஏற்க வேண்டும்.

3 மாதத்திற்கு ஒருமுறை, இந்தோ – மலேசிய கூட்டுச் செயற்குழுவினால் இந்த செலவினங்கள் மதிப்பாய்வு செய்யப்படும்.

தனிமைப்படுத்துதல் இல்லாதபடியால் அதற்கான செலவு மிச்சப்படும்.