Home நாடு 15ஆவது பொதுத்தேர்தல் : மஇகா எந்தத் தொகுதிகளையும் விட்டுக் கொடுக்காது – விக்னேஸ்வரன் அறிவிப்பு

15ஆவது பொதுத்தேர்தல் : மஇகா எந்தத் தொகுதிகளையும் விட்டுக் கொடுக்காது – விக்னேஸ்வரன் அறிவிப்பு

481
0
SHARE
Ad

கோலாலம்பூர் – 15ஆவது பொதுத்தேர்தல் அடுத்த ஓராண்டில் எப்போது வேண்டுமானாலும் நடைபெறலாம் என்ற சூழ்நிலையில் அதனை எதிர்கொள்ள மஇகா தயாராக இருக்கிறது என அறிவித்திருக்கிறார் மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ ச. விக்னேஸ்வரன்.

நேற்று புதன்கிழமை (ஏப்ரல் 27) மஇகா தலைமையகத்தில் நடைபெற்ற மத்திய செயற்குழுக் கூட்டத்திற்குப் பின்னர் நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பின்போது விக்னேஸ்வரன் இவ்வாறு தெரிவித்தார்.

15-வது பொதுத் தேர்தலில் எந்தத் தொகுதிகளையும் எண்ணிக்கை ரீதியாக, மஇகா விட்டுக் கொடுக்காது என விக்னேஸ்வரன் உறுதிபடத் தெரிவித்தார். அம்னோ தலைவர்கள் தேசிய முன்னணியின் நட்புக் கட்சிகளுக்கு அடுத்த பொதுத் தேர்தலில் தொகுதிகள் ஒதுக்கப்படும் என தொடர்ந்து அறிவித்து வரும் நிலையில் விக்னேஸ்வரன் மஇகாவின் நிலைப்பாட்டத் தெரிவித்திருக்கிறார்.

#TamilSchoolmychoice

“மஇகாவைப் பொறுத்தவரையில் நாங்கள் கடந்த 14-வது பொதுத்தேர்தலில் எத்தனை சட்டமன்ற – நாடாளுமன்றத் தொகுதிகளில் போட்டியிட்டோமோ அதே எண்ணிக்கையில்தான் மீண்டும் போட்டியிடுவோம். ஆனால் தொகுதி மாற்றங்கள் இருக்கலாம்” என அவர் மேலும் தெரிவித்தார்.

அந்த அடிப்படையில்தான் ஜோகூர் மாநிலத் தேர்தலிலும் நான்கு சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிட்டோம். 3-இல் வெற்றி பெற்றோம். ஒரே ஒரு தொகுதியில் மிகக்குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தோல்வி கண்டோம். அந்த முடிவை எதிர்த்து வழக்கும் தொடுத்துள்ளோம் என அவர் மேலும் குறிப்பிட்டார்.