Home நாடு காவல் துறையின் பட்டாசு அழிப்பின்போது 3 பணியாளர்கள் காயம்

காவல் துறையின் பட்டாசு அழிப்பின்போது 3 பணியாளர்கள் காயம்

737
0
SHARE
Ad

கோலாலம்பூர் : காவல் துறை கைப்பற்றும் ஆதாரங்களையும், அழிக்கப்பட வேண்டிய பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களையும் தலைநகர் செந்தூலில் ஒரு சேமிப்புக் கிடங்கில் வைத்திருந்தது.

அதில் வைக்கப்பட்டிருந்த சட்டவிரோதப் பட்டாசுகளைக் காவல் துறையினர் நேற்று செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 26) அழிக்க முற்பட்டபோது, மிகப் பெரிய வெடிப்புச் சத்தம் கேட்டதோடு, சுற்றுவட்டாரங்களை புகைமண்டலமும் சூழ்ந்தது.

இந்த வெடிப்பின்போது அங்கிருந்த 3 பணியாளர்களும் காயமடைந்தனர்.

#TamilSchoolmychoice

கடந்த மார்ச் மாதத்தில் கைப்பற்றப்பட்ட இந்தப் பட்டாசுகளின் மதிப்பு 4.17 மில்லியன் ரிங்கிட்டாகும்.

மிக விரைவாக அந்தப் பட்டாசுகள் தீப்பற்றிக் கொண்டதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்தனர்.

நீதிமன்ற உத்தரவின்படி அந்தப் பட்டாசுகள் அழிக்கப்பட்டன என செந்தூல் காவல் நிலையத் தலைவர் (ஓசிபிடி) துணை ஆணையர் பே எங் லாய் தெரிவித்தார்.

பிற்பகல் 3.00 மணியளவில் மாஜிஸ்திரேட் மற்றும் ஊடகவியலாளர்கள் முன்னிலையில் பட்டாசு அழிப்புப் பணிகள் தொடங்கின.

காயம்பட்ட மூவருக்கும் சிறிய அளவிலேயே பாதிப்புகள் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.