Home நாடு பல்கலைக் கழகத்தில் பயிலும் இந்திய மாணவி மின்சாரம் தாக்கி மரணம் – குடும்பத்தினர் அதிர்ச்சி

பல்கலைக் கழகத்தில் பயிலும் இந்திய மாணவி மின்சாரம் தாக்கி மரணம் – குடும்பத்தினர் அதிர்ச்சி

644
0
SHARE
Ad

சிந்தோக், கெடா : இங்குள்ள யுனிவர்சிடி உத்தாரா மலேசியா பல்கலைக் கழகத்தில் பயிலும் இந்திய மாணவி ஒருவர் தங்கியிருந்த மாணவர் விடுதியில் மின்சாரம் தாக்கி மரணமுற்றதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. 20 வயதே ஆன அவரின் மரணம் குறித்து குடும்பத்தினர் அதிர்ச்சி தெரிவித்துள்ளனர்.

எஸ்.வினோசினி என்னும் பெயர் கொண்ட அவர் கணக்கியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறையில் 4-வது தவணை (செமஸ்டர்) படித்துக் கொண்டிருந்தார்.

கோவிட்-19 காரணமாக வீட்டில் இருந்தபடியே கல்வியைத் தொடர்ந்த அவர் கடந்த மே 14-ஆம் தேதி மீண்டும் பல்கலைக் கழக வளாகத்திற்குத் திரும்பியிருந்தார். அவரின் தந்தையார் ஆர்.சிவகுமார் தனது மகளின் மரணத்தை உறுதிப்படுத்தியிருக்கிறார்.