விமர்சகர்களிடையே படத்தைப் பற்றி பெரிய அளவிலான பாராட்டுகள் இல்லை என்றாலும் விக்ரம் இரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. திரையிடப்பட்ட எல்லா இடங்களிலும் வசூல் மழை பொழிந்து வருகிறது விக்ரம்.
கமல், விஜய் சேதுபதி, பகத் பாசிலின் சிறந்த நடிப்பு, லோகேஷ் கனகராஜின் சிறப்பான இயக்கம், குறிப்பாக படத்தின் இறுதியில் ரோலெக்சாக-வில்லனாக-அதகளப்படுத்தும் சூர்யாவின் பிரவேசம் – இப்படி எல்லாம் சேர்ந்து படம் இரசிகர்களிடையே மிகப் பெரிய அளவில் வரவேற்பைப் பெற்றுள்ளது.
படம் திரையிடப்பட்ட முதல் நாளிலேயே, தமிழ் நாட்டில் மட்டும் 20 கோடி ரூபாய் வசூலை ஈட்டியிருக்கிறது. உலக அளவில் சுமார் 45 கோடி ரூபாயை விக்ரம் வசூலித்திருக்கிறது.
அடுத்த சில நாட்களிலேயே தமிழ் நாட்டில் மட்டும் 100 கோடி ரூபாய் வசூலை விக்ரம் எட்டும் என்றும் மொத்தம் 500 கோடி ரூபாயைத் தொட்டு விடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.