Home வாழ் நலம் ஆரஞ்சு சத்துப்பட்டியல்

ஆரஞ்சு சத்துப்பட்டியல்

532
0
SHARE
Ad

orangeகோலாலம்பூர், ஏப்ரல் 24- பழச்சாறு மிகுந்த கனிகளில் ஆரஞ்சுப் பழத்திற்கு தனி இடம் உண்டு. உடலுக்கு அவசியமான ஊட்டச் சத்துக்கள், வைட்டமின்கள், தாது உப்புக்களும் இதில் நிறைந்துள்ளன. ஆரஞ்சு பழம் அக்டோபர் முதல் பிப்ரவரி மாதங்களில் அதிகமாக கிடைக்கும். ஆரஞ்சுப் பழத்தின் சத்துக்களை தெரிந்து கொள்வோமா..

ஆரஞ்சுப் பழம் சிட்ரஸ் அமிலம் நிறைந்த கனியாகும். குறைந்த ஆற்றல் வழங்கக் கூடியது. பூரிதமாகாத கொழுப்பு இதில் கிடையாது.

எளிதில் ஜீரணமாகும் நார்ப் பொருட்கள் ஆரஞ்சுப் பழத்தில் மிகுந்துள்ளது. ‘பெக்டின்’ எனும் நார்ப்பொருள் குறிப்பிடத்தக்கது. இது உடல் எடை மிகுந்தவர்களின் ஆரோக்கியத்திற்கு துணைபுரியும். சிறந்த மலமிளக்கியாகவும் ‘பெக்டின்’ பயன்படும். குடல்பகுதியில் புற்றுநோயை விளைவிக்கும் நச்சுப்பொருட்கள் சேர விடாமல் காக்கும். ரத்தத்தில் கொழுப்பின் அளவை கட்டுக்குள் வைப்பதிலும் பெக்டின் உதவுகிறது.

#TamilSchoolmychoice

‘வைட்டமின் சி’ நிறைந்தது ஆரஞ்சு. 100 கிராம் பழத்தில் 53.2 மில்லிகிராம் ‘வைட்டமின் சி’ இருக்கிறது. இது தினசரி உடலில் சேர்த்துக் கொள்ள வேண்டிய அளவில் 90 சதவீதம் என்பது குறிப்பிடத்தக்கது. இது சிறந்த நோய் எதிர்ப்பு பொருள் என்பதும் குறிப்பிடத்தக்கது. நோய்த் தொற்றுகளில் இருந்து உடலைக் காப்பதில் ‘வைட்டமின் சி’ முக்கியபங்கு வகிக்கிறது.

ஆரஞ்சுப் பழத்தில் ‘வைட்டமின் ஏ’, அதிக அளவில் உள்ளது. இது சிறந்த நோய் எதிர்ப்பு பொருளாகும். இது சருமத்திற்கும், பார்வைத் திறனுக்கும் நன்மை பயக்கும். நுரையீரல் மற்றும் வாய்ப்புற்று நோய் வராமல் காப்பதில் ‘வைட்டமின் ஏ’ குறிப்பிட்ட அளவில் பங்கு வகிக்கிறது.

பொட்டாசியம், கால்சியம் போன்ற அத்தியாவசிய தாது உப்புக்களும் ஆரஞ்சுப் பழத்தில் இருக்கிறது. பொட்டாசியம் உடல் வளவளப்புத் தன்மையுடன் இருக்க உதவும். இதயத்துடிப்பு மற்றும் ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைப்பதிலும் பொட்டாசியத்திற்கு பங்குண்டு.