Home உலகம் கோத்தாபாய ராஜபக்சே இரகசியப் பாதையின் வழி அதிபர் மாளிகையில் இருந்து வெளியேறினாரா?

கோத்தாபாய ராஜபக்சே இரகசியப் பாதையின் வழி அதிபர் மாளிகையில் இருந்து வெளியேறினாரா?

605
0
SHARE
Ad

கொழும்பு :இலங்கை அதிபர் கோத்தாபாய ராஜபக்சே அதிபர் மாளிகையில் இருந்து அவசர மருத்துவ ஊர்தி (ஆம்புலன்ஸ்) மூலம் தப்பித்து வெளியேறினார் என இதற்கு முன்பு வெளியிடப்பட்ட தகவல்கள் தெரிவித்தன.

இலங்கையில் பெருமளவில் பரவி வரும் மக்கள் போராட்டங்களைத் தொடர்ந்து, பொதுமக்கள் அதிபர் மாளிகைக்குள் நுழைந்து ஆக்கிரமித்தனர். அங்கிருந்த சமையல் அறையில் சமைத்து உண்டனர். நீச்சல் குளத்தில் நீச்சலடித்து மகிழ்ந்தனர்.

கோத்தாபாய ராஜபக்சே கப்பலின் மூலமாக நாட்டை விட்டே தப்பிச் சென்றிருக்கலாம் எனவும் தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றன. அவர் கப்பல் ஒன்றின் மூலம் தப்பிச் செல்வது போன்ற காணொலிக் காட்சிகளும் சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டு வருகின்றன.

#TamilSchoolmychoice

இதற்கிடையில், அதிபர் மாளிகையில் நுழைந்த பத்திரிகையாளர்கள் அங்கிருந்த இரகசியச் சுரங்கப் பாதை ஒன்றைக் கண்டுபிடித்திருக்கின்றனர். இந்த இரகசியப் பாதையின்வழி கோத்தாபாய தப்பித்துச் சென்றிருக்கலாம் என பத்திரிகையாளர்கள் கருதுகின்றனர்.

இதற்கிடையில் இலங்கையின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே ஜூலை 9 சனிக்கிழமையன்று தனது பதவியிலிருந்து விலகினார். நாடெங்கும் எழுந்திருக்கும் பொதுமக்களின் கொந்தளிப்பைத் தொடர்ந்து அவர் பதவி விலக முன்வந்திருக்கிறார்.

அவரின் இல்லத்தில் நுழைந்த ஆர்ப்பாட்டக்காரர்கள், வீட்டை ஆக்கிரமித்ததோடு, அவரின் இல்லத்திற்கும் தீ வைத்தனர். பின்னர் தீயணைப்புப் படையினர் வந்து அந்தத் தீயை அணைத்தனர்.