Home உலகம் கோத்தாபாய மாளிகையில் பணத்தை எடுத்து – எண்ணிப் பார்த்து – திருப்பிக் கொடுத்த ஆர்ப்பாட்டக்காரர்கள்

கோத்தாபாய மாளிகையில் பணத்தை எடுத்து – எண்ணிப் பார்த்து – திருப்பிக் கொடுத்த ஆர்ப்பாட்டக்காரர்கள்

537
0
SHARE
Ad

கொழும்பு : இலங்கையில் அதிபர் கோத்தாபாய ராஜபக்சேயுக்கு எதிராகத் திரண்டு ஆர்ப்பார்ட்டம் நடத்திய பொதுமக்கள் அவரின் அதிகாரபூர்வ இல்லத்திற்குள் நுழைந்தனர். அதைத் தொடர்ந்து அங்கிருந்த பணம் வைக்கும் பெட்டியை உடைத்துத் திறந்தனர்.

பொதுவாக இதுபோன்ற தருணங்களில் அனைவரும் கருதுவது ஆர்ப்பாட்டக்காரர்கள் அதுபோன்ற பணத்தை எடுத்துக் கொண்டு ஓடிவிடுவதுதான். ஆனால் இலங்கை ஆர்ப்பாட்டக்காரர்கள் தங்களின் போராட்டத்தின் நோக்கத்தைச் சிதைக்காமல் அங்கிருந்த பணத்தை எண்ணிப் பார்த்து விட்டு, அங்கே இருந்த பாதுகாப்பு அதிகாரிகளிடம் பத்திரமாக ஒப்படைத்த நெகிழ்ச்சியான சம்பவமும் நிகழ்ந்துள்ளது.

இலங்கை அதிபர் வீட்டை முற்றுகையிட்டு உள்ளே நுழைந்த  மக்கள் அவரின் வீட்டு படுக்கை அறைக்குள் நுழைந்த பின் அதில் இருந்த பெரிய இரும்புப் பெட்டியை (லாக்கரை) போராட்டக்காரர்கள் உடைத்துத் திறந்தனர்.

#TamilSchoolmychoice

உள்ளே குவியல் குவியலாக பணம் இருந்துள்ளது. முழுக்க இலங்கை ரூபா மற்றும் அமெரிக்க டாலர்கள் கட்டுக் கட்டாக இருந்தன. பணத்தைக் கைப்பற்றிய போராட்டக்காரர்கள் அதை உள்ளேயே வைத்து எண்ணி இருக்கிறார்கள். நேரலையாக அந்தக் காட்சிகளை எடுத்து காணொலி வழியாக முகநூல் பக்கத்தில் பகிர்ந்துள்ளனர்

போராட்டக்காரர்கள் அந்தப் பணத்தை எடுத்து செல்ல மறுத்து, அங்கிருந்த காவல் துறை அதிகாரிகளிடம் போராட்டக்காரர்கள் பணத்தை அப்படியே கொடுத்தனர். போராட்டக்காரர்கள் அந்த பணத்தில் இருந்து ஒரு ரூபா கூட எடுக்காமல் அப்படியே காவல் துறையினரிடம் திருப்பிக் கொடுத்தனர். போராட்டக்காரர்களின் இந்தச் செயலால் காவல் துறையினர் நெகிழ்ச்சி அடைந்தனர்.