Home இந்தியா அதிமுக அலுவலகத்தில் கைகலப்புகள் – மோதல்கள் – கல் வீச்சுகள் – இரத்தக் களரி

அதிமுக அலுவலகத்தில் கைகலப்புகள் – மோதல்கள் – கல் வீச்சுகள் – இரத்தக் களரி

599
0
SHARE
Ad

சென்னை:  (மலேசிய நேரம் காலை 11.00 மணி நிலவரம்) ஒரு பரபரப்பான சூழ்நிலையில் இன்று திங்கட்கிழமை காலை 9.15 மணிக்கு (இந்திய நேரப்படி) அதிமுக பொதுக்குழு நடைபெறவிருக்கும் நிலையில் எடப்பாடி பழனிசாமி தன் இல்லத்திலிருந்து புறப்பட்டு நேராக அதிமுக பொதுக்குழு நடைபெறும் வானகரம் சென்று சேர்ந்துள்ளார்.

இதற்கிடையில் மற்றொரு அதிமுக ஒருங்கிணைப்பாளரான ஓ.பன்னீர் செல்வம் தன் இல்லத்திலிருந்து புறப்பட்டு ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகம் நோக்கிச் செல்ல முற்பட்டார். அதிமுக அலுவலகத்தை இபிஎஸ் ஆதரவாளர்கள் முற்றுகையிட்டு ஓபிஎஸ் குழுவினரையும் அவரின் வாகனத்தையும் தடுத்து நிறுத்த முற்பட்டுள்ளனர்.

இருதரப்புகளுக்கும் இடையில் கல்வீச்சுகளும் கைகலப்புகளும் மோதல்களும் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. அந்த வட்டாரத்தில் இருந்த வாகனங்கள் தாக்கி உடைக்கப்பட்டிருக்கின்றன.

#TamilSchoolmychoice

ஓபிஎஸ் வாகனத்தில் இரத்தக் கறைகள் இருப்பதை தொலைக்காட்சி அலைவரிசைகள் காட்டின. பலர் ரத்தக் காயங்களோடு இருப்பதையும் பார்க்க முடிந்தது.

தற்போது ஓபிஎஸ் அதிமுக அலுவலகம் வந்து சேர்ந்துள்ளார்.

இதற்கிடையில், அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கோரிய வழக்கில் சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதியின் தீர்ப்பும் இன்று காலை 9 மணிக்கு வெளியாகிறது.