Home இந்தியா அதிமுக பொதுக் குழு நடத்தத் தடையில்லை – சென்னை உயர் நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு

அதிமுக பொதுக் குழு நடத்தத் தடையில்லை – சென்னை உயர் நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு

625
0
SHARE
Ad

சென்னை : அதிமுக பொதுக் குழுவுக்கு எதிராகத் தடைவிதிக்கக் கோரி ஓ.பன்னீர் செல்வம் தொடுத்த வழக்கைத் தள்ளுபடி செய்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ராமசாமி கிருஷ்ணன், அதிமுக பொதுக் குழு நடத்த எந்தவிதத் தடையும் இல்லை என அதிரடித் தீர்ப்பை வழங்கியுள்ளார்.

ஒரு கட்சியின் உள் நடவடிக்கைகளில் நீதிமன்றம் தலையிட முடியாது என்றும் நீதிபதி தெரிவித்துள்ளார்.

அதிமுக அலுவலகத்திற்கு வெளியே அதிரடிப் படையினர் அதிக அளவில் குவிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அங்கு நடந்து வரும் மோதல்களைத் தணிக்க தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

#TamilSchoolmychoice

அதிமுக அலுவலகத்தில் இருந்து ஓபிஎஸ்-இபிஎஸ் ஆதரவாளர்கள் சில கோப்புகளைக் கைப்பற்றி எடுத்துச் சென்றுள்ளதாகவும் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

நீதிமன்றத் தீர்ப்பைத் தொடர்ந்து வானகரத்தில் அதிமுக பொதுக் குழு, செயற்குழுக் கூட்டங்கள் எந்தவிதத் தடையுமின்றி தொடங்கியுள்ளது.