Home உலகம் கோத்தாபாய ராஜபக்சே இராணுவ விமானத்தில் இலங்கையிலிருந்து தப்பி – மாலைத் தீவில் அடைக்கலம்

கோத்தாபாய ராஜபக்சே இராணுவ விமானத்தில் இலங்கையிலிருந்து தப்பி – மாலைத் தீவில் அடைக்கலம்

442
0
SHARE
Ad
கோத்தாபாய ராஜபக்சே

கொழும்பு : இலங்கை அதிபர் பதவியிலிருந்து இன்று இரவுக்குள் கோத்தாபாய ராஜபக்சே விலகுவார் என இலங்கை நாடாளுமன்றத்தின் அவைத் தலைவர் (சபாநாயகர்) அறிவித்துள்ளார்.

கொழும்புவிலிருந்து இராணுவ விமானம் ஒன்றின் மூலமாக கோத்தபாய நாட்டை விட்டு தப்பி ஓடி, அருகிலுள்ள மாலைத் தீவு நாட்டில் அரசியல் அடைக்கல் புகுந்துள்ளார்.

73 வயதான கோத்தாபாய ராஜபக்சே உள்ளூர் நேரப்படி பிற்பகல் 3.00 மணியளவில் மாலைத் தீவு வந்தடைந்தார் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

#TamilSchoolmychoice

கோத்தாபாய ராஜபக்சே முடிவினால், பல ஆண்டுகளாக இலங்கை அரசியலில் ஆதிக்கம் செலுத்தி ஆண்ட ஒரு குடும்ப வம்சத்தின் ஆட்சி முடிவுக்கு வந்துள்ளது.

சனிக்கிழமையன்று (ஜூலை 9)அவரது இல்லத்தை மக்கள் முற்றுகையிட்டதை அடுத்து அவர் தலைமறைவாக இருந்தார். கோத்தாபாய ராஜபக்சே முன்னதாக ஜூலை 13 புதன்கிழமை பதவி விலகுவதாக உறுதியளித்தார்.

அவரது சகோதரரும், முன்னாள் நிதியமைச்சருமான பசில் ராஜபக்சேயும் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக ஊடகங்கள் தெரிவித்துள்ளன. அவர் அமெரிக்கா செல்லக்கூடும் எனக் கருதப்படுகிறது.