Home உலகம் பிரிட்டன் பிரதமர் : ரிஷி சுனாக்குக்கு ஆதரவு பெருகுகிறது

பிரிட்டன் பிரதமர் : ரிஷி சுனாக்குக்கு ஆதரவு பெருகுகிறது

606
0
SHARE
Ad

இலண்டன் : அடுத்த பிரிட்டன் பிரதமராக போரிஸ் ஜோன்சனுக்குப் பதிலாக யார் தேர்ந்தெடுக்கப்படுவார் என்ற பரபரப்பு அனைத்துலக அளவில் நிலவி வரும் நிலையில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த முன்னாள் நிதியமைச்சர் ரிஷி சுனாக்குக்கு கன்சர்வேடிவ் கட்சியில் ஆதரவு பெருகி வருகிறது.

இதுவரையில் 11 வேட்பாளர்கள் ஆளும் கன்சர்வேடிவ் கட்சியிலிருந்து பிரதமராக ஆர்வம் காட்டியுள்ளனர். இந்த எண்ணிக்கை தற்போது 8-ஆகக் குறைந்துள்ளதாக ஆகக் கடைசியானத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர்களில் இந்தியாவின் இன்போசிஸ் நிறுவனத்தின் அதிபரான நாராயணமூர்த்தியின் மருமகன் ரிஷி சுனாக் முன்னணி வகிக்கிறார்.

நேற்று செவ்வாய்க்கிழமை (ஜூலை 13) துணைப் பிரதமர் டோமினிக் ராப், ரிஷிக்கு ஆதரவு வழங்க முன்வந்திருக்கிறார். அதைத் தொடர்ந்து முன்னாள் போக்குவரத்து அமைச்சரான கிராண்ட் ஷோப்ஸ், ரிஷக்குத் தன் ஆதரவை வழங்குவதாக அறிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

பிரிட்டனின் முதல் இந்தியப் பிரதமராக ரிஷி தேர்ந்தெடுக்கப்பட்டு சாதனை படைப்பாரா என உலக இந்திய வம்சாவளியினர் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

ரிஷியின் குடும்ப சொத்து மதிப்பு 730 மில்லியன் பிரிட்டிஷ் பவுண்ட் (1 பவுண்ட் = 5.27 மலேசிய ரிங்கிட்) எனக் கணக்கிடப்படுகிறது.