Home நாடு பிகேஆர்: சைபுடின் நசுத்தியோன் மீண்டும் தலைமைச் செயலாளர்; நூருல் இசா, சரஸ்வதி கந்தசாமி உதவித் தலைவர்களாக...

பிகேஆர்: சைபுடின் நசுத்தியோன் மீண்டும் தலைமைச் செயலாளர்; நூருல் இசா, சரஸ்வதி கந்தசாமி உதவித் தலைவர்களாக நியமனம்!

572
0
SHARE
Ad

கோலாலம்பூர் : பிகேஆர் கட்சியின் தேர்தலுக்குப் பின்னர் புதன்கிழமை (ஜூலை 20) மாலையில்  நடைபெற்ற உச்சமன்றக் கூட்டத்தில் கட்சியின் தலைமைச் செயலாளராக நசுத்தியோன் இஸ்மாயில் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஏற்கனவே, தலைமைச் செயலாளராக இருந்த நசுத்தியோன், துணைத் தலைவருக்கான தேர்தலில் ரபிசி ரம்லியை எதிர்த்துப் போட்டியிட்டுத் தோல்வி கண்டார்.

பெர்மாத்தாங் பாவ் நாடாளுமன்ற உறுப்பினரும் மகளுமான நூருல் இசாவை அன்வார் இப்ராகிம் உதவித் தலைவர்களில் ஒருவராக நியமித்தார்.

#TamilSchoolmychoice

வழக்கறிஞரான சரஸ்வதி கந்தசாமி பிகேஆர் கட்சியின் உதவித் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அன்வார் இப்ராகிம் அறிவித்தார்.