Home நாடு மொகிதின் யாசின் – “நாடாளுமன்றக் கலைப்புக்கு அமைச்சரவை ஒப்புதல் அளிக்க வேண்டும்”

மொகிதின் யாசின் – “நாடாளுமன்றக் கலைப்புக்கு அமைச்சரவை ஒப்புதல் அளிக்க வேண்டும்”

405
0
SHARE
Ad

புத்ராஜெயா: நாடாளுமன்றத்தைக் கலைப்பதற்கு முன், அமைச்சரவையின் பச்சைக்கொடியை பிரதமர் பெற வேண்டும் என்று டான்ஸ்ரீ மொகிதின் யாசின் வலியுறுத்தியுள்ளார்.

பிரதமர் பதவியை ஏற்கும் முன் பெரிக்காத்தான் நேஷனலுடன் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் செய்துகொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் இதைக் கூறுவதாக பெர்சாத்து கட்சியின் தலைவருமான மொகிதின் யாசின் கூறினார்.

“நாடாளுமன்றத்தைக் கலைக்க ஒரு தேதியை அறிவிக்குமாறு நான் அவருக்கு சவால் விட விரும்பவில்லை, ஆனால் நான் அவரைப் பதவியில் அமர்த்தும்போது, நாடாளுமன்றத்தைக் கலைப்பதற்கு முன் பெரிக்காத்தானுடன் விவாதிப்பதாக அவர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்” என்று மொகிதின் மேலும் கூறினார்.

#TamilSchoolmychoice

நாடாளுமன்றத்தை கலைக்க மாமன்னருக்கு ஆலோசனை வழங்குவதற்கு முன் பிரதமர் அமைச்சரவையின் ஒப்புதலைப் பெற வேண்டும் என்று கூட்டரசு அரசியலமைப்புச் சட்டம் கூறுகிறது என்றும் பெரிக்காத்தான் கூட்டணியின் தலைவருமான மொகிதின் சுட்டிக் காட்டினார்.

“அவரைப் பிரதமராக்கும்போது செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தப் பத்திரத்தில் அவ்வாறு எழுதப்பட்டிருக்கிறது. இருப்பினும், அமைச்சரவையில் பெரும்பான்மையானவர்கள் பெரிக்காத்தானைச் சேர்ந்தவர்கள் என்பதால், அவர்கள் இப்போது தேர்தலை நடத்த விரும்பவில்லை என்பதை நான் அறிவேன். நேரம் சரியில்லை. இன்னும் சில மாதங்கள் காத்திருக்கலாம்” என்று பெர்சாத்துவின் ஆறாவது ஆண்டு விழாவைக் கொண்டாடும் நிகழ்ச்சியில் செய்தியாளர்களிடம் மொகிதின் கூறினார்.