பெய்ஜிங் : சீனா அரசியலில் திடீர் திருப்பமாக நடப்பு அதிபரும் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவருமான ஜீ ஜின் பெங்குக்கு எதிராக ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சி நடைபெற்றிருப்பதாகவும், ஜின் பெங் தற்போது வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருப்பதாகவும் சமூக ஊடகங்களில் தகவல்கள் பரவி வருகின்றன.
அண்மையில் உஸ்பெகிஸ்தானில் உள்ள சமார்காண்ட் நகரில் அனைத்துலக மாநாடு ஒன்றில் கலந்து கொள்ள ஜின் பெங் சென்றிருந்தபோது சீன இராணுவத்தின் தலைவர் பதவியில் இருந்து அவர் அகற்றப்பட்டிருக்கிறார் என்றும் தற்போது வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருக்கிறார் என்றும் இந்தியாவின் பாஜக தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணிய சுவாமி தன் டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டார்.
எனினும் இது குறித்து அதிகாரபூர்வத் தகவல்கள் ஏதும் வெளியிடப்படவில்லை.
(மேலும் விவரங்கள் தொடரும்)