Home உலகம் ஜீ ஜின் பெங் சீன அரசு தொலைக்காட்சியில் தோன்றினார்

ஜீ ஜின் பெங் சீன அரசு தொலைக்காட்சியில் தோன்றினார்

655
0
SHARE
Ad

பெய்ஜிங் : வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருப்பதாக வதந்திகள் பரவி வந்த நிலையில், சீன அதிபர் ஜி ஜின்பிங் சீன அரசு தொலைக்காட்சியில் தோன்றியிருக்கிறார்.

செப்டம்பர் 16 அன்று உஸ்பெக்கிஸ்தானில் நடைபெற்ற அனைத்துல உச்சிமாநாட்டில் கலந்து கொண்டு திரும்பிய பிறகு முதல் முறையாக பொது நிகழ்ச்சியில் நேற்று செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 27) அவர் தோன்றினார்.

அவர் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவில்லை என்ற வதந்திகளுக்கு மத்தியில் கம்யூனிஸ்ட் கட்சியின் கண்காட்சியை பார்வையிட்டார்.

#TamilSchoolmychoice

சீன அதிபர் ஜி ஜின்பிங், செவ்வாய்கிழமை, செப்டம்பர் 27 அன்று, கம்யூனிஸ்ட் கட்சியின் கண்காட்சிக்கு சென்றபோது, ​​அரசு தொலைக்காட்சியில் மீண்டும் தோன்றினார்.

செப்டம்பர் 16 அன்று சமர்கண்டில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சிமாநாட்டில் இருந்து அவர் திரும்பிய பிறகு பொதுவில் அவர் தோன்றுவது இதுவே முதன் முறையாகும்.

அடுத்த மாதம் ஆளும் கட்சியின் முக்கிய மாநாட்டுக்கு முன்னதாக பொது நிகழ்ச்சிகளில் அவர் பங்கு பெறாதது பல வதந்திகளுக்கு வித்திட்டது.

சில நாட்களுக்கு முன்னர், சீனா அரசியலில் திடீர் திருப்பமாக நடப்பு அதிபரும் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவருமான ஜீ ஜின் பெங்குக்கு எதிராக ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சி நடைபெற்றிருப்பதாகவும், ஜின் பெங் தற்போது வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருப்பதாகவும் சமூக ஊடகங்களில் தகவல்கள் பரவின.

அண்மையில் உஸ்பெகிஸ்தானில் உள்ள சமார்காண்ட் நகரில் அனைத்துலக மாநாடு ஒன்றில் கலந்து கொள்ள ஜின் பெங் சென்றிருந்தபோது சீன இராணுவத்தின் தலைவர் பதவியில் இருந்து அவர் அகற்றப்பட்டிருக்கிறார் என்றும் தற்போது வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருக்கிறார் என்றும் இந்தியாவின் பாஜக தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணிய சுவாமி தன் டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டார்.

எனினும் இது குறித்து அதிகாரபூர்வத் தகவல்கள் ஏதும் வெளியிடப்படவில்லை.