Home நாடு 15-வது பொதுத் தேர்தல் : அம்னோ தலைவர்கள் மட்டும் எடுக்கும் முடிவு செயல்படுத்த முடியுமா?

15-வது பொதுத் தேர்தல் : அம்னோ தலைவர்கள் மட்டும் எடுக்கும் முடிவு செயல்படுத்த முடியுமா?

434
0
SHARE
Ad
அம்னோவின் 5 மூத்த தலைவர்கள் வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 30) சந்திப்புக் கூட்டம் நடத்தியபோது…

கோலாலம்பூர் : அடுத்த பொதுத் தேர்தலுக்கான பரபரப்பு மீண்டும் மலேசியர்களைத் தொற்றிக் கொண்டுள்ளது. பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சாப்ரி உள்ளிட்ட அம்னோவின் 5 மூத்த தலைவர்கள் இன்று மாலையில் ஒன்றுகூடி அடுத்த பொதுத் தேர்தலுக்கான சாத்தியத் தேதிகளை விவாதித்தனர்.

அதுகுறித்து அவர்கள் ஒருமித்த முடிவொன்றை எடுத்திருப்பதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர்களின் சந்திப்பை அடுத்து இன்று இரவில் நடைபெறும் அம்னோ உச்சமன்றக் கூட்டத்தில் அவர்கள் கலந்து கொண்டனர்.

அம்னோ உச்சமன்றக் கூட்டத்திலும் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.