Home நாடு பாஸ் ஆளும் மாநிலங்களில் சொந்த சின்னத்தில் போட்டி

பாஸ் ஆளும் மாநிலங்களில் சொந்த சின்னத்தில் போட்டி

504
0
SHARE
Ad

கோலாலம்பூர் : – தாங்கள் ஆட்சி செய்யும் கெடா, கிளாந்தான், திரெங்கானு ஆகிய மூன்று மாநிலங்களில்  தங்களின் சொந்த கட்சி சின்னத்திலேயே பாஸ் வேட்பாளர்கள் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவார்கள். மற்ற மாநிலங்களில் பாஸ் வேட்பாளர்கள் பெரிக்காத்தான் நேஷனல் சின்னத்தில் போட்டியிடுவார்.

பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியில் நிரந்தரமாக நீடிக்கப் போவதாக அறிவித்திருக்கிறது பாஸ்.

#TamilSchoolmychoice

மேற்குறிப்பிட்ட மூன்று மாநிலங்களிலும்  சட்டமன்றங்கள் கலைப்பு இல்லை என பாஸ் ஏற்கெனவே அறிவித்துவிட்டது.

இந்த மூன்று மாநிலங்களிலும் மாநில அரசாங்க ஆட்சியை அது கொண்டிருப்பதால் அங்கு பெரிக்காத்தான் சின்னத்தில் போட்டியிட அது தயங்குவதை இந்த முடிவு காட்டுகிறது.