Home நாடு 15-வது பொதுத் தேர்தல் : பதாகைப் போரில் யாருக்கு வெற்றி?

15-வது பொதுத் தேர்தல் : பதாகைப் போரில் யாருக்கு வெற்றி?

444
0
SHARE
Ad

கோலாலம்பூர் : நாடெங்கிலும் சில பகுதிகளில் சுற்றி வந்தபோது, பதாகைப் போர் – போஸ்டர் வார் (Poster War) – எப்படி இருக்கிறது என்பதைக் காண முடிந்தது. பொதுத் தேர்தல் என்று வரும்போது இந்தப் பதாகைப் போர்தான் முதலிலும் – பெரும்பாலும் – வாக்காளர்களின் கண்களில் படும் காட்சிகள் என்பதால் ஒரு பொதுத் தேர்தலில் அது மிக முக்கியம் என்பார்கள்.

அந்த வகையில் கண்ணைப் பறிக்கும் விதத்தில் பதாகைகள் – சின்னங்கள் – அமைந்திருப்பது பக்காத்தான் கூட்டணிக்குத்தான்! தராசு சின்னத்துடன் கூடிய தேசிய முன்னணி பதாகைகள் நீல வண்ணத்தில் இருக்கின்றன. பெரிக்காத்தான் நேஷனல் என்னும் தேசியக் கூட்டணி கொடிகளும் எழுத்துகளுடன் ஏறத்தாழ அதே நீல வண்ணத்துடன் அமைந்திருக்கின்றன.

இதனால், சாலையோரங்களில் நீலவண்ணமாகக் காட்சியளிக்கும் பதாகைகள் இந்த 2 கூட்டணிகளையும் தனித்து அடையாளம் காட்டவில்லை. இரண்டுமே நீலவண்ணத்தில் அடங்கி விடுகின்றன.

#TamilSchoolmychoice

ஆனால், பக்காத்தான் கொடிகளோ கண்ணைப் பறிக்கும் சிவப்பு நிறத்தில் அமைந்திருக்கின்றன. தனித்துத் தெரிகின்றன. எனவே, இதுவே பதாகைப் போரில் பக்காத்தான் முன்னணி வகிப்பதற்கான காரணம்!

அன்வாரின் படமும் – பக்காத்தான் வேட்பாளர்களின் படமும்

பதாகைப் போரில் பக்காத்தான் ஹாரப்பான் கூட்டணி முன்னணி வகிக்கிறது என்பதற்கான இன்னொரு உதாரணம், அவர்களின் பதாகைகளில் எல்லாம் பிரதமர் வேட்பாளரான அன்வார் இப்ராகிமின் படமும் இடம் பெற்றிருப்பதுதான்.

ஏறத்தாழ எல்லாத் தொகுதிகளிலும் வேட்பாளரின் படமும், அன்வாரின் படமும் இணைந்து நிற்கும் படங்களுடன் கூடிய பதாகைகள் நிறைய அளவில் வைக்கப்பட்டிருக்கின்றன. இதனால் புதுமுக வேட்பாளர்களும் தங்களைப் பிரதமர் வேட்பாளரோடு அடையாளப்படுத்திக் கொள்ள முடிகிறது.

தேசிய முன்னணி பதாகைகளில் அந்தக் கூட்டணியின் தலைவர் சாஹிட் ஹாமிடி படமோ – பிரதமர் வேட்பாளர் இஸ்மாயில் சாப்ரி படமோ காணப்படுவதில்லை. இது அவர்களுக்கான ஒரு பலவீனமாகக் கருதப்படுகிறது.

அதே சமயம் தனிநபர் தலைவர்களை முன்னிருத்தாமல் கூட்டணியையும் அதன் சின்னத்தையும் மட்டுமே மக்களுக்கானத் தேர்வாக முன்னிருத்தும் பிரச்சாரத்திற்கு தேசிய முன்னணி முக்கியத்துவம் கொடுப்பதைக் காண முடிகிறது.