Home நாடு அன்வார் அமைச்சரவை இந்திய சமூகத்திற்கு ஏமாற்றமா?

அன்வார் அமைச்சரவை இந்திய சமூகத்திற்கு ஏமாற்றமா?

530
0
SHARE
Ad

புத்ரா ஜெயா : டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் இன்று இரவு அறிவித்த புதிய அமைச்சரவை குறித்து பரவலாக இந்திய சமூகத்தில் அதிருப்திகள் எழுந்துள்ளன.

மீண்டும் ஒரே ஒரு இந்திய அமைச்சராக ஜசெக சார்பில் பத்து காஜா நாடாளுமன்ற உறுப்பினர் வி.சிவகுமார் நியமிக்கப்பட்டிருக்கிறார். மனித வள அமைச்சராக அவர் நியமிக்கப்பட்டிருக்கிறார்.

90 விழுக்காட்டுக்கும் மேல் பக்காத்தான் கூட்டணிக்கு ஆதரவாக வாக்களித்த இந்திய சமூகத்திற்கு மீண்டும் ஒரே ஓர் அமைச்சர் பதவிதானா என்ற ஏமாற்றம் இந்திய சமூகத்திற்கு ஏற்பட்டிருக்கிறது.

#TamilSchoolmychoice

துணையமைச்சர்கள் இதுவரை அறிவிக்கப்படாததால் இந்தியர்களில் எத்தனை பேருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்பது இதுவரை தெரியவில்லை. அநேகமாக, ஜசெகவின் கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் கணபதி ராவ், பிகேஆர் கட்சியின் சுங்கை பூலோ நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ ரமணன், சிகாமாட் நாடாளுமன்ற உறுப்பினர் யுனேஸ்வரன், பத்து நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினர் பிரபாகரன் ஆகியோர் துணையமைச்சர்களாக நியமிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

சாஹிட் ஹாமிடியை துணைப் பிரதமராக நியமித்த விதத்தில் அன்வார் மீதான கடும் கண்டனங்கள் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.