Home நாடு அன்வார் மீண்டும் நிதியமைச்சர் – முதலீட்டாளர்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்தவே பொறுப்பேற்கிறார்

அன்வார் மீண்டும் நிதியமைச்சர் – முதலீட்டாளர்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்தவே பொறுப்பேற்கிறார்

395
0
SHARE
Ad

புத்ரா ஜெயா : இன்று இரவு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் அறிவித்த புதிய அமைச்சரவை அவருக்கு இனிய – பழைய – மறக்க முடியாத உணர்வுகளை ஏற்படுத்தியிருக்கும்.

1998-ஆம் ஆண்டில் அவர் நிதியமைச்சராக இருந்தபோதுதான் அப்போதைய பிரதமர் துன் மகாதீரால் அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டார். அம்னோவிலிருந்தும் நீக்கப்பட்டார். 24 ஆண்டுகளுக்குப் பிறகு அதே நிதியமைச்சர் பதவிக்கு தன்னைத் தானே நியமித்துக் கொண்டு, பிரதமராகவும் கம்பீரமாக – எந்த மகாதீர் தன்னை நீக்கினாரோ – அதே மகாதீரின் முன்னிலையில் வலம் வந்து கொண்டிருக்கிறார்.